கோட்டிகள்

மற்ற ஊர்களை விட நாகர்கோயிலில் கோட்டிகள் கொஞ்சம் அதிகம். இந்தக் காலகட்டத்தைக் கண்டு எரிச்சலுற்றுத் தன்னைக் கோமாளிகளாக ஆக்கிக்கொண்டவர்கள், தங்கள் விமர்சனத்தை நக்கலாக வெளிப்படுத்துபவர்கள் என அவர்களைச் சொல்லலாம். தக்கலை தொலைபேசிநிலையத்துக்கே ஒருவர் வருவார். காலை எழுந்ததும் எல்லா அரசு அலுவலகத்துக்கும் சென்று தேங்கிக்கிடக்கும் பொதுமக்கள் சம்பந்தமான, ஏழைகள் சம்பந்தமான விஷயங்களை விசாரித்து நடவடிக்கை இல்லாவிட்டால் புகார்கொடுப்பார். கையில் எப்போதுமே நூறுக்கும் மேல் புகார்க் கடிதங்கள் இருக்கும்.

ஒருமுறை ஏதோ தாசில்தார் ஒரு கிழவியிடம் பணம் எதிர்பார்த்து இருபதுதடவைக்கும் மேலே விண்ணப்பத்தையே மாற்றச்சொல்ல இவர் அதே விண்ணப்பத்தின் ஐம்பதுக்கும் மேற்பட்ட வேறுவடிவங்களை எழுதினாராம். 200 பக்கம். கூடவே எல்லா ஆவணங்களுக்கும் நகல். எல்லாத் தகவல்களையும் கூடை நிறையக் குப்பைக் காகிதங்களையும் சேர்த்து ஒரு தகரப்பெட்டியில் ஏற்றித் தன் தலையில் வைத்துத் தாசில்தார் ஆபீஸுக்கு நகர்மையம் வழியாக ஊர்வலமாகச் சென்றார். கையில் போர்டு, என்ன விஷயம் என்று. அன்றே தாசில்தார் இடமாற்றம் செய்யப்பட்டார்!

இது இன்னொரு கோட்டி. வாழ்க

முந்தைய கட்டுரைகாவியங்களும் தொன்மங்களும்
அடுத்த கட்டுரைநகுலன் நினைவு