ரத்தசாட்சி, ஓர் உரையாடல்

சில படங்களில் ஒரு ஏமாற்றம் நிகழும். அதிலொன்று, ஓடிடி படம் இது என நம்பி ஒன்றை சுமாரான முதலீட்டில் எடுத்து வெளியிடுவார்கள். நல்ல எதிர்வினைகள் வந்ததும் ‘அடாடா தியேட்டரில் வெளிவந்திருந்தால் அள்ளியிருக்குமே’ என பிலாக்காணம் வைப்பார்கள்.

இப்போது திரையரங்கில் வெற்றிகரமான படங்கள் இல்லை. ஆகா ஓடிடி தளத்தில் ரத்தசாட்சி பார்த்துவிட்டு, எதிர்வினைகளையும் கவனித்துவிட்டு வினியோகஸ்தர்கள் ‘ஏன் சார் ஓடிடிக்கு குடுத்தீங்க? இப்ப தியேட்டர்ல வந்திருந்தா பணம் பாத்திருக்கலாம்சார், எங்களுக்கெல்லாம் நஷ்டமாப்போச்சு சார்” என்றனர்.

“நான் எங்க ரிலீஸ் பண்ணினேன்? எனக்கு அந்த படத்தோட தயாரிப்பிலே சம்பந்தமே இல்லை” என்றேன். “இருந்தாலும் நீங்க சொல்லியிருக்கலாமே” என்றனர். அதெப்படி என்று நான் கேட்கவில்லை.

ஒன்றும் செய்வதற்கில்லை. இப்படியாவது மக்களிடம் சென்று சேர்ந்தால் சரி. ஒருவேளை தெலுங்கில் மறுஆக்கம் செய்யப்படலாம்.

முந்தைய கட்டுரைமலேசியா வாரம்-3
அடுத்த கட்டுரையாருக்காக ?