விஷ்ணுபுரம் இலக்கிய விருது – தமிழ் விக்கி
விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் – தமிழ் விக்கி
சாரு நிவேதிதா தமிழ் விக்கி
Charu Nivedita – Tamil Wiki
விஷ்ணுபுரம் விருது 2022 – தொகுப்பு
எழுத்தாளர் சாரு நிவேதிதாவுக்கு 2022 ஆம் ஆண்டுக்கான விஷ்ணுபுரம் விருது வழங்கப்படுகிறது. விழா நிகழ்வு 18 டிசம்பர் 2022 அன்று கோவை ராஜஸ்தானி சங் அரங்கில் (ஆர்.எஸ்.புரம்) நிகழும்.
17 டிசம்பர் காலை முதல் விஷ்ணுபுரம் இலக்கியவிழா தொடங்குகிறது. வாசகர் சந்திப்புகள் காலை 9 மணியில் இருந்து தொடங்கும்.
எழுத்தாளர்கள் கார்த்திக் பாலசுப்ரமணியன், கார்த்திக் புகழேந்தி, கமலதேவி, அகரமுதல்வன், அ.வெண்ணிலா ஆகியோரும் மொழிபெயர்ப்பாளர் குளச்சல் மு.யூசுப்பும் பதிப்பாளர் விஜயா வேலாயுதமும் வாசகர்களைச் சந்திக்கின்றனர்.
18 டிசம்பர் காலையில் அருணாச்சல பிரதேச எழுத்தாளரும் கவிஞருமான மமங் தாய் வாசகர்களைச் சந்திக்கிறார். சாரு நிவேதிதாவுடன் ஓர் உரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இலக்கிய மற்றும் பதிப்பக தொடர்பாளர்களான கனிஷ்கா குப்தா, மேரி தெரஸி குர்கலங் ஆகியோருடனும் ஓர் உரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அன்று மாலை 5 மணிக்கு அராத்து இயக்கிய சாரு நிவேதிதா பற்றிய ஆவணப்படம் திரையிடப்படும். தொடர்ந்து விருதுவிழா நிகழும்.அதில் மமங் தாய், போகன் சங்கர், ஜெயமோகன், காளிபிரசாத் ஆகியோர் கலந்துகொள்கின்றனர்
வாசகர்கள் அனைவரும் இருநாட்களிலும் பங்கெடுக்கவேண்டுமென கோருகிறோம்.
விஷ்ணுபுரம் இலக்கியவட்டம்
செந்தில்குமார் 9363225581