தேவாங்கர் தமிழகத்தில் ஆந்திரநிலத்தில் இருந்து குடியேறியவர்கள். அவர்களைப் பற்றிய ஆவணப்பதிவுகள் குறைவு. ஜப்பானிய ஆய்வாளரான யுமிகோ நானாமி எழுதியிருக்கிறார். தமிழிலும் பல்வேறு நூல்கள் வெளிவந்துள்ளன. விரிவான சமூகவியல்பதிவுகள் தமிழின் ஒவ்வொரு இனக்குழு பற்றியும் உருவாக்கப்படவேண்டும். இனக்குழு பேதங்களும் பூசல்களும் மறையவேண்டும். அவற்றின் பண்பாடுகள் பதிவுசெய்யப்படவேண்டும்.