இந்திரா பார்த்தசாரதி தமிழிலக்கியத்துடன் எழுபதாண்டுகளாக இருந்து வருகிறார். ஒருமுறை அவர் சொன்னார், ”வழக்கமாக சிற்றிதழ்களில் எழுதி பேரிதழ்களுக்குச் செல்வார்கள். நான் பேரிதழ்களிலிருந்து சிற்றிதழ்களுக்குச் சென்றேன்”.
குறும்பான மெல்லிய நகைச்சுவை இபாவின் அடையாளம். ‘அமெரிக்காவில் மகனுடன் இருந்திருக்கலாமே, ஏன் இந்தியா வந்தீர்கள்?’ என்று நான் ஒருமுறை கேட்டேன். “Jeyamohan, i want a country to hate” என்றார்.