என்னைப் பற்றிய ஆவணப்படத்துக்கு விருது

சென்ற ஆகஸ்ட் மாதம் மலையாள தொலைக்காட்சியான ஆசியாநெட் என்னைப்பற்றிய ஒரு முப்பது நிமிட ஆவணப்படத்தை எடுத்தது. எம்.ஜி.அனீஷ் அதை இயக்கியிருந்தார். ஓணம் நாளில் அது ஒளிபரப்பானது. அதே ஓணம் நாளில் மழவில் மனோரமா (மலையாள மனோரமா இதழின் தொலைக்காட்சி) சார்பில் இதழியலாளர் ஜெயமோகன் என்னைப்பற்றி இன்னொரு ஆவணப்படம் எடுத்து அதுவும் வெளியாகியது. 

2022 ஆம் ஆண்டுக்கான ஊடக விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. எம்.ஜி. அனீஷ் என்னைப்பற்றி தயாரித்த ஆவணப்படம்தோராக் கதகளுடே நாஞ்சிநாடு’ (ஈரமுலராத கதைகளின் நாஞ்சில்நாடு) சிறந்த வாழ்க்கைவரலாற்றுஆளுமைச் சித்திர ஆவணப்படத்துக்கான விருதை பெற்றுள்ளது.

எம்.ஜி.அனீஷுக்கு பாராட்டுக்கள்

முந்தைய கட்டுரைநமது அறிவியலும் நமது புனைகதையும்
அடுத்த கட்டுரைஅஞ்சலி- நாரணோ ஜெயராமன்