நீல பத்மநாபன்

சில ஊர்களில் சில கட்டிடங்கள் உண்டு. அவை ஒன்றும் அசாதாரணமான அழகு கொண்டவை அல்ல. இயல்பான சாதாரணமான கட்டிடங்கள். ஆனால் காலம் மாறிக்கொண்டிருக்க அவை மாறாமல் அப்படியே இருந்துகொண்டிருக்கும். நீல பத்மநாபனின் முன்று நாவல்கள் அத்தகையவை. அவை எழுதப்பட்ட காலத்தில் கொண்டாடப்பட்ட பல ஆசிரியர்களின் படைப்புகளை இன்று நனைந்த அப்பளம்போலத்தான் பார்க்கமுடிகிறது. நீல பத்மநாபனின் நாவல்கள் நான் முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன் வாசித்த அதே மனநிலையை இப்போதும் அளிக்கின்றன.வாழ்க்கை பற்றிய ஒரு தெளிவையும் சலிப்பையும் கூடவே புரிந்துகொள்ளமுடியாத ஒரு நிறைவையும் அளிப்பவை அவை

நீல பத்மநாபன்

நீல பத்மநாபன்
நீல பத்மநாபன் – தமிழ் விக்கி

 

முந்தைய கட்டுரைதெய்வங்களுடன் வாழ்தல், கடிதங்கள்
அடுத்த கட்டுரைநாயாடிக்காப்பனும் இந்து மதமும்