கூந்தல், கடிதம்

கூந்தல் வாங்க

அன்புள்ள ஜெ

அண்மையில் ஜா.தீபா ஓர் உரையில் கூந்தல் என்னும் சிறுகதை பற்றிச் சொல்லியிருந்தார். அந்தச் சிறுகதை எந்த தொகுப்பில் உள்ளது? அந்தக்கதை எந்த இதழில் பிரசுரமானது என்று தேடிப்பார்த்தேன். உங்கள் கதைகள் பெரும்பாலும் படித்திருக்கிறேன். அந்தக்கதையை படித்ததில்லை. ஆகவே இந்தக்கடிதம்

ரமணி கார்த்திக்

*

அன்புள்ள ரமணி,

கூந்தல் என்ற கதை 1998 ல் குமுதம் இதழில் வெளிவந்தது. அப்போது மணா குமுதம் ஆசிரியர் பொறுப்பில் இருந்தார். என் கதைகளை தீபாவளி மலருக்கு வாங்கி பிரசுரித்தார். குமுதத்தில் எழுதப்பட்டதானாலும் அது தீவிரமான, நுட்பமான கதை. குமுதம் வாசகர்கள் எவரும் அதை வாசித்து விரும்பியதாகச் சொல்லவில்லை. தீவிர வாசகர் கவனிக்கவில்லை.

அது முதல்வாசிப்பில் ஒரு நேரடியாக பெண் விடுதலையை அறைகூவும் கதை. ஆனால் ஒரு கூடவே ஒரு சிறு கதைவிளையாட்டும் உள்ளது, அதன்வழியாக வாழ்க்கையின் தீராத விசித்திரம் ஒன்றையும் உணர்த்தி நிற்கிறது.

அச்சிறுகதை அடங்கிய தொகுதி கூந்தல் என்ற பெயரிலேயே கவிதா பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது. அந்நூலின் அட்டை அமைப்பு எல்லாமே பொதுவாசகர்களுக்குரிய வடிவில் இருந்தமையால் அப்போதும் தீவிர வாசகர்கள் கவனிக்கவில்லை.

அண்மையில் விஷ்ணுபுரம் பதிப்பக வெளியீடாக அந்நூல் மறுபதிப்பாகியுள்ளது. இப்போதுதான் அதிலுள்ள கதைகள் கவனிக்கப்படுகின்றன. அவை பெரும்பாலும் அக்காலகட்டத்தில் வெளியான, பரவலாக அறியப்படாத கதைகள்.

ஜெ

முந்தைய கட்டுரைவிஷ்ணுபுரம், ஓர் ஓவியத்தின் கதை
அடுத்த கட்டுரைசோர்பா என்னும் கிரேக்கன்- பிரவீன் குமார்