நவம்பர் 2022 – நீலி (neeli.co.in)
ஜெ,
சைதன்யாவின் முதல் படைப்பும், சதீஷ்குமார் சீனிவாசனின் கவிதை பற்றிய முதல் முறையான விமர்சனக் கட்டுரையும், ஜெயராம் எடுத்த முதல் நேர்காணலும் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. நண்பர்கள் விக்னேஷ் ஹரிஹரன், சுரேஷ் பிரதீப், சாம்ராஜ், இசை, நரேன், பார்கவி, நந்தகுமார் ஆகியோர் பங்களித்துள்ளனர். ”நண்பர்கள் இணைந்து செய்யும் தொகுத்தல் பணி” என்பதையே அவர்களின் சிரத்தையான கட்டுரைகள் வெளிப்படுத்துகின்றன. மேலும் செறிவாகக் கொணர முற்படுகிறோம் ஜெ.
ரம்யா.