தமிழில் ஒரு தனித்தன்மை காணக்கிடைக்கிறது. எழுத்தாளர்களின் பிள்ளைகள் பெரும்பாலும் இலக்கிய ஆர்வம் அற்றவர்கள். இலக்கிய வெறுப்பாளர்களும்கூட. தந்தையின் நூல்கள் நாட்டுடைமை ஆக்கப்படும்போதே அவர்கள் தந்தைமேல் கொஞ்சம் ஆர்வம் கொள்கிறார்கள்- பணத்தை பிரித்துக்கொள்வதில். தந்தை பற்றிய நினைவுகளை பதிவுசெய்த மைந்தர்களே அரிதினும் அரிதானவர்கள்.
ஆனால் தமிழறிஞர்கள், மத அறிஞர்களின் மைந்தர் அவ்வாறல்ல. அவர்களில் பலர் தந்தையின் வழியை பின் தொடர்ந்தவர்கள். அ.ச.ஞானசம்பந்தன், இரா.கலைக்கோவன் போல ஒரு நீண்ட வரிசையே உண்டு.இதற்குக் காரணம் தமிழறிஞர்களுக்குக் கிடைக்கும் சமூக அங்கீகாரம். இலக்கியவாதிகளுக்கு வசைதான் மிஞ்சும். ஆகவே தங்கள் பிள்ளைகளை டாக்டரும் எஞ்சீனியருமாக ஆக்க முயல்கிறார்கள். இலக்கியம் பக்கமே வராமல் பார்த்துக்கொள்கிறார்கள்.
வ.சு.செங்கல்வராய பிள்ளை திருப்புகழை பதிப்பித்த வ.த.சுப்ரமணிய பிள்ளையின் மகன். திருப்புகழை செம்மைசெய்து பதிப்பித்த பேரறிஞர்.
வ.சு.செங்கல்வராய பிள்ளை