வ.த.சுப்ரமணிய பிள்ளை பற்றி பெரும்பாலானவர்களுக்கு தெரிந்திருக்காது. ஆனால் தமிழன்பர்கள், சைவர்கள் மறக்கமுடியாத பெயர் அது. திருப்புகழை பல்வேறு சுவடிகள், வாய்மொழிகளில் இருந்து தொகுத்துப் பதிப்பித்தவர் அவர்.
நாமக்கல்லில் நீதிபதியாகப் பணியாற்றிய சுப்ரமணிய பிள்ளை நாமக்கல் பற்றி இப்படி தன் நாட்குறிப்பில் எழுதியிருக்கிறார். ‘பெரிய ஊராகிய இந்த நாமக்கல்லில் ஒரு சிவன் கோயிலோ சைவக் கோயிலோ இல்லாதிருப்பது ஆச்சரியமாகவும் வருத்தத்தைத் தரத்தக்கதாயும் இருக்கிறது. குளக்கரையில் ஒரு பிள்ளையார் இருக்கிறார்; இவரே இவ்வூர்ச் சைவர்களுக்குள்ள மூர்த்தி’
வ.த.சுப்ரமணிய பிள்ளை