பொன்னியின் செல்வன் எதிர்விமர்சனம், கடிதங்கள்

பொன்னியின் செல்வன், ஓர் எதிர்விமர்சனம்.

பொன்னியின் செல்வன் கோட்டைகள் nativity இல்லை என்பதை விட originality இருந்தது உண்மை.

தமிழ் மன்னர்கள் ஒரு கோட்டையையும் விட்டு செல்லாத நிலையில் பழைய திரைப்படங்களில் வருவதைப் போல அட்டை கோட்டை வைக்காமல், கண்கள் விரிய பார்க்கத் தக்க ஒரிஜினல் கோட்டையை காட்டியதற்கு எத்தனை பாராட்டினாலும் தகும்.

இந்த கட்டுரையில் குறிப்பிட்டுள்ளது போல அநேக நடைமுறை சிக்கலகளை தாண்டி இந்த புனைவு படமாக கனி ந்திருப்பதற்கு இந்த தமிழ் கூறும் நல்லுலகம் நன்றிக்கடன் பட்டுள்ளது.

G சியாமளா கோபு

*

அன்புள்ள ஜெ

கோம்பை அன்வர் அவருடைய கட்டுரையில் முன்வைக்கும் பல அவதானங்கள் பிழையானவை. சோழர்காலச் செப்புத்திருமேனிகள் ராஜராஜ சோழனுக்குப்பின் சோழர்களின் பேரரசு உருவானபின் உருவாகி வந்தவை. சோழர்கால ஓவியங்களும் அப்படி பின்னர் உருவாகி வந்தவைதான். சோழர்காலக் கலை, சோழர்கால கட்டிடக்கலை என்று நாம் இன்று சொல்லும் எல்லாமே ராஜராஜ சோழன் முடிசூட்டிக்கொண்டபிறகு, குறைந்தது 30 ஆண்டுகளுக்குப் பின்னால் உருவானவை.

தஞ்சை பெரிய கோயிலை வைத்து சுந்தர சோழனின் ஆட்சிக்காலத்தை மதிப்பிட முடியாது. சுந்தர சோழனின் ஆட்சிக்காலத்தில் இருந்தவை எல்லாமே மிகச்சிறிய கோயில்கள் (கொடும்பாளூர் ஐவர் கோயில் போல. )  அதை கல்கியே அவருடைய நாவலில் சொல்கிறார். கல்கியே நாவலில் அந்நாளில் தஞ்சையும் பழையாறையும் பிறகு அடைந்த கீர்த்தியை அடையவில்லை என்கிறார். ஆகவே பொன்னியின் செல்வனில் சோழர்களின் கீர்த்தியை காட்டவில்லை என்பது ஒரு எளிமையான புரிதல் மட்டும்தான்.

உண்மையில் அதில் காட்டப்பட்டிருப்பது மிகையான எதார்த்தம். அன்றைக்கு சோழநாடு ஒரு சிற்றரசு அளவிலேயே இருந்தது. சோழர்காலக் கட்டிடக்கலை என்பதெல்லாம் ராஜராஜசோழன் வாதாபியில் இருந்தும், கலிங்கத்தில் இருந்தும் சிற்பிகளைக் கொண்டுவந்து உருவாக்கியது. குறிப்பாக கஜுராகோவின் காந்தரிய மகாதேவர் கோயிலின் சாயல் தஞ்சைபெரிய கோயிலுக்கு உண்டு. அந்த சிற்ப அமைப்பிலேயே கலிங்கத்தின் பங்களிப்பு இருக்கலாம்

தி.ஜெகன்னாதன்

முந்தைய கட்டுரைபின் தொடரும் நிழலின் குரலும் இருட்கனியும்
அடுத்த கட்டுரைகதாநாயகி, கடிதம்