நூறுநாற்காலிகள், கடிதம்

அன்புள்ள ஆசிரியருக்கு,

வணக்கம்.

இன்று எங்கள் அலுவலகத்தில் உயர்மட்ட ஆய்வுக் கூட்டம் நடந்து கொண்டிருந்தது. மூத்த ஐ. ஏ. எஸ் அதிகாரியான துறைத்தலைவர் கூட்டத்தை நடத்திக் கொண்டிருந்தார். சூழ்நிலை பொருந்திப்போக,  திடீரென ‘அறம்’ தொகுப்பிலிருந்து ‘நூறு நாற்காலிகளை’ முழுமையாக ஐந்து நிமிடங்கள் சொன்னார். மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தது.

தங்கள் வழிகாட்டுதல்படி யதியை பயின்று கொண்டிருக்கிறேன். ஒன்றிரண்டு முறை வியாசபிரசாத் சாமிக்கும், முனிநாராயண சாமிக்கும் கடிதங்கள் எழுதினேன். பதில்கள் வந்தன.  முனிநாராயண சாமியிடம் சில புத்தகங்கள் கேட்டிருந்தேன். அனுப்பியிருந்தார். ‘That alone the core of wisdom’ பயிற்றலில் இருக்கிறது. ஆத்ம உபதேச சதகத்தில் பராபரக்கண்ணியின் தாக்கத்தை காண முடிந்தது. யார் இயம்பினாலும் உண்மை ஒன்று தானே!

நன்றி

சுந்தர மகாலிங்கம்

*

அன்புள்ள சுந்தர மகாலிங்கம்

அறம் கதைகள் சென்று சேர்ந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

ஆத்மோபதேச சதகம் பராபரக்கண்ணி போன்றவை ஏறத்தாழ ஒரே அறிவுத்தளத்தைச் சேர்ந்தவை. நாராயணகுருவுக்கு தமிழ்ச் சித்தர் மரபுடன் அணுக்கமான உறவு உண்டு

ஜெ

அறம் கதைகள் வாங்க 

முந்தைய கட்டுரைபஷீரின் மதிலுகள்
அடுத்த கட்டுரைநீல பத்மநாபன், கடிதம்