விசும்பு கடிதங்கள்.

அன்புள்ள ஜெ

விசும்பு அறிவியல்சிறுகதைகள் எனக்கு மிக ஆழமான அனுபவத்தை அளித்தவை. அறிவியல்சிறுகதைகளின் முக்கியமான அம்சமே பாரடாக்ஸ் என்பதுதான். சொல்லிமுடியாத ஒரு புதிர் அல்லது சிக்கலுக்குள் வாசகனை இழுத்துப் போடுவது. அதைத்தான் பித்தம் முதலிய கதைகள் செய்கின்றன. அவை கதைகளில் இருந்து வாசகன் வெளியேற விடுவதில்லை. இங்கே அறிவியல்கதை என எழுதப்படும் பல கதைகள் கதையை விளக்கி கதைக்குள்ளேயே முடிந்துவிடுபவை. இந்தக்கதைகளின் மர்மம் வசீகரமானதாக உள்ளது.

ஜெயசீலன் கருணா

*

அன்புள்ள ஜெமோ

விசும்பு கதைகளில் இரண்டு கதைகள் யோகமரபு பற்றியவை. யோகமரபை சைக்காலஜிக்கலாக அணுகினால் பலவகையான கதைகளுக்கான கரு கிடைக்குமென தோன்றுகிறது. நீண்டகாலமாக இதையெல்லாம் அவதானிப்பவர் என்னும் வகையில் நீங்கள் யோகம் சார்ந்து மட்டுமே சில அறிவியல் கதைகளை எழுதலாமே என்ற எண்ணம் ஏற்பட்டது

சச்சின்

விசும்பு அறிவியல்புனைகதைகள் வாங்க 

முந்தைய கட்டுரைதனிமை, கடிதம்
அடுத்த கட்டுரைவள்ளலார், கடிதம்