கொத்தமங்கலம் சுப்பு -கடிதங்கள்

கொத்தமங்கலம் சுப்பு – தமிழ்விக்கி

தில்லானா மோகனாம்பாள் – தமிழ் விக்கி

அன்புள்ள ஜெ

கொத்தமங்கலம் சுப்பு பற்றிய குறிப்பு மிக விரிவாக இருந்தது. இக்காலகட்டத்தில் மறைந்த ஓர் ஆளுமை பற்றி இப்படி ஒரு விரிவான நேர்த்தியான பதிவு என்பது மிகுந்த நிறைவளிப்பது. மற்ற இடங்களிலுள்ள பதிவுகள் எந்த அளவுக்கு அரைகுறையானவை, எந்த அளவுக்கு கைபோனபோக்கில் எழுதப்பட்டவை என்று பார்க்கையில் வருத்தமும் ஏற்படுகிறது.

கொத்தமங்கலம் சுப்பு பலவகையாக இன்று அறியப்பட்டாலும் காந்திமகான் கதை என்ற பெயரில் அவர் நிகழ்த்திய வில்லுப்பாட்டுக்காகவே புகழ்பெற்றிருந்தார். தேசிய இயக்கத்தில் பங்களிப்பாற்றியவர்

என்.ஆர். ராமகிருஷ்ணன்

அன்புள்ள ஜெ

கொத்தமங்கலம் சுப்பு (கலைமணி) எழுதிய தில்லானா மோகனாம்பாள் வெளிவந்தபோது நான் சிறுவன். என் அம்மா அவ்வளவு ஆர்வமாக வாசிப்பார். அந்தக்கதை அன்று தமிழகத்தையே கட்டிப்போட்டிருந்தது. பிற்பாடு சினிமாவாகவும் வெளிவந்தது. கோபுலுவின் படங்களுடன் பழனியப்பா பிரதர்ஸ் அழகான நூலாக அதை அச்சிட்டிருக்கிறது. இப்போது கிடைக்கிறதா என தெரியவில்லை

ஆர்.ராஜப்பா

முந்தைய கட்டுரைஅறிவியக்கத்தில் இணைதல் – கடிதம்
அடுத்த கட்டுரைஅல்லையன்ஸ் குப்புசாமி ஐயர்