2022 விஷ்ணுபுரம் விருது விழாவை ஒட்டிய வாசகர் திருவிழாவின்போது வழக்கம்போல வாசகர்களுக்கும் எழுத்தாளர்களுக்கும் இடையிலான விவாத அரங்குகள் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. முதல் நாள் அரங்கில் எழுத்தாளர் அ.வெண்ணிலா கலந்துகொள்கிறார்.
அ.வெண்ணிலா இன்று எழுதிவரும் படைப்பாளிகளில் விரிவான பார்வை கொண்டவர். கங்காபுரம் போன்ற வரலாற்று நாவல்களை எழுதுகிறார். ஆனந்தரங்கம் பிள்ளையின் நாட்குறிப்புகளை பதிப்பித்திருக்கிறார். இலக்கிய ஆய்வும் விமர்சனமும் கொண்ட ’மரணம் ஒரு கலை’ விரிவான ஆய்வுப்புலம் கொண்ட ’நீரதிகாரம்’ போன்ற நூல்களை எழுதுகிறார்.