முடியரசன், கவிதைப் போட்டி

முடியரசன்  – தமிழ் விக்கி

பெருந்தகையீர்!

தமிழ், தமிழர், தமிழ்நாடு, பொதுவுடைமை, சாதிசமய மறுப்பு, சமூகபொருளாதார விடுதலை, குமுகாய மறுமலர்ச்சி ஆகிய தளங்களில் தமிழ்க்குடி விழிக்கப் பாடிய வீறுகவியரசர் முடியரசனாரின் படைப்புகளை முன்னிறுத்தி இளையோருக்கான புலமைப்பரிசில் திட்டமொன்றை கவிஞரின் 103ஆம் வெள்ளணி நாளான 07.10.2022 அன்று வீறுகவியரசர் முடியரசன் அவைக்களம் அறிவித்தது.

வீறுகவியரசர் முடியரசனார் புலமைப்பரிசில் 2022 அறிவிப்பை இங்கே காணலாம்

இதனொரு பகுதியாகமுடியரச முழக்கம்எனும் தலைப்பில் வீறுகவியரசர் முடியரசனாரின் படைப்புகள் மீதான பேச்சுப்போட்டி அறிவிக்கப்பட்டுள்ளதுஎவரும் எப்பகுதியில் இருந்தும் வலையொளி வழியாக இப்போட்டியில் பங்குபெற முடியும். மொத்தப் பரிசுத்தொகையான இந்திய ரூ.15,000/- அறிவிக்கப்பட்டுள்ளது

போட்டி தொடர்பான தகவல்களும் விதிமுறைகளும் விண்ணப்பப் படிவமும் இங்கே உளhttps://mudiyarasan.org/போட்டி

இச்செய்தியைத் தங்கள் நட்பு வட்டத்திடையேயும் தமிழ் உறவுகளிடையேயும் ஊடகங்களிலும் தெரியப்படுத்த வேண்டுகிறோம்.

நன்றி

இவண்

வீறுகவியரசர் முடியரசன் அவைக்களம் 

தொடர்புக்கு+91 6379 670 194, +91 98425 89571, +91 97888 04480 

முந்தைய கட்டுரைசக்திவேல், கடிதம்
அடுத்த கட்டுரைஉலகம் யாவையும்