வலையிலும் வெளியிலும்

பொன்னியின் செல்வன் சினிமா வந்தபின் என்னிடம் பேசுபவர்கள், எனக்கு எழுதுபவர்கள் திரும்பத்திரும்பச் சொல்லும் ஒன்று, அவர்களின் குழந்தைகளிடம் உருவாகியிருக்கும் ஆர்வம். அவர்கள் உழைத்து தமிழ் வரலாற்றையும் சோழர்களைப் பற்றியும் அறிந்துகொள்ள முயல்கிறார்கள். அக்குழந்தைகள் ஆங்கிலம் வழியாக இதைப்போன்ற அகன்றதிரைப் படங்கள் பலவற்றை மிக இளமையில் இருந்தே பார்த்தவர்கள். அவை இப்படத்தை விட பத்துமடங்கு முதலீடு கொண்டவை, இருமடங்கு மேம்பட்ட தொழில்நுட்பம் கொண்டவை. அவற்றை மீறி இப்படத்தை அவர்கள் ரசிப்பதற்குக் காரணம் இதிலுள்ள நேர்மையான வரலாற்றுச்சித்திரமும், அழகிய காட்சியூடக வெளிப்பாடும்தான். அவற்றை மட்டுமே நம்பி மணி ரத்னம் இப்படத்தை எடுத்து வென்றிருக்கிறார்.

இந்தக்குழந்தைகள் நவீன உலகின் பிரதிநிதிகள். அவர்களுக்குச் சினிமா என்றால் என்ன என்று தெரியும். இங்கே வழக்கமாக சினிமா பார்த்து அதில் ஊறிக்கிடப்பவர்கள்தான் வில்லன் -ஹீரோ, தொடக்கம்- கிளைமாக்ஸ், ஃபர்ஸ்ட் பார்ட் -செகண்ட் பார்ட் என்றெல்லாம் அபத்தமான ‘டெம்ப்ளேட்’களில் சிக்கி இருக்கிறார்கள். சினிமாவே தெரியாமல் தொடர்கதையுலகில் சிக்கியிருக்கிறார்கள் மேலும் சிலர். குழந்தைகள் அடுத்த காலகட்டத்திற்குச் சென்றுவிட்டிருக்கின்றன். உண்மை, எல்லா குழந்தைகளுமல்ல. கம்ப்யூட்டர் கேம் உலகிற்குச் சென்றுவிட்ட, மீளமுடியாத குழந்தைகள் பலரைப்பற்றியும் சொன்னார்கள். அவர்களால் பத்து நிமிடம் உட்கார முடியவில்லை. காட்சிகள் ஓரிரு நொடிகளுக்குமேல் நீடிப்பதை தாள முடியவில்லை. அக்குழந்தைகள் அமெரிக்கா உருவாக்கி உலகுக்கு விற்கும் அதிவேகக் காட்சியூடகம் என்னும் மாபெரும் மாயையின் அடிமைகள். அதிலிருந்து பெரும்பாலும் அவர்களால் மீளமுடியாது. எஞ்சிய குழந்தைகளே இவ்வாறு புதியவற்றுக்குள் செல்லமுடியும்.

இந்நிகழ்வின் பண்பாட்டு முக்கியத்துவத்தை புரிந்துகொள்ளுமளவுக்கு இங்கே அறிவுஜீவிகளுக்கு பார்வைவிரிவு இல்லை. அவர்கள் இன்னொருவகை மாயையில் சிக்கியிருக்கிறார்கள். அது முகநூல். அந்த வலை உருவாக்கும் விவாதத்தில் ஏதேனும் ஒரு தரப்பாக ஒலிப்பதன்றி சுயமான சிந்தனையே சாத்தியமல்லாமல் ஆகியிருக்கிறது பெரும்பாலானவர்களுக்கு. அவர்களுக்கும் வெளிவருவதற்கான வாய்ப்புகள் மிகக்குறைவு. ஏனென்றால் வெளிவந்து, சிந்தனை செய்து, எழுதி, தனக்கான ஓர் இடத்தை உருவாக்கிக்கொள்ள மிகக்காலமாகும். அதுவரை தனிமை, வெறுமை சூழ்ந்திருக்கும். அதை தாங்கும் ஆற்றல் அவர்களுக்கில்லை. முகநூல் திரட்டித்தரும் வம்புக்கும்பலை கண்டு தன் குரல் கவனிக்கப்படுவதாகவும், தனக்கும் ஆளிருப்பதாகவும் எண்ணிக்கொள்கையில் ஒரு வகை நிறைவு உருவாகிறது.

இக்குழந்தைகளே நம் நம்பிக்கை

ஜெ

அன்பு ஆசானுக்கு,

பொன்னியின் செல்வன் படம் இங்கு அமெரிக்காவில் பார்த்தோம். எனக்கு மிகவும் பிடித்திருந்தது. திரைப்படத்தை பற்றி என் 16 வயது மகள் (பாரதி) எழுதியதை உங்கள் பார்வைக்கு அனுப்ப விருப்பம். அதற்காகவே இந்த கடிதம்.

படம் பார்க்கும் முன் ஓர் புகழ் பெற்ற விமர்சகரின்  youtube விமர்சனம் பார்த்துவிட்டு அவள் சொன்னது.. ‘வில்லன் யார் என்று தெளிவாக தெரியவில்லை என்பது ஒரு விமர்சனமா? . தமிழ் சினிமாவை இந்த பைனரியில் இருந்து வெளியில் இந்த socalled reviewers வர விடமாட்டார்கள் போல“. 


அதே போல் படத்தை பார்த்து முடித்தவுடன் திரையரங்கத்தில் என் நண்பர் ஒருவர்.. கேமரா நிறைய இடத்திலகாட்டும்போது  தெளிவில்லாதவாறு இருப்பதாகவும் shaky ஆக இருப்பதாகவும் கூற ஆரம்பித்தார். காரில் வீட்டிற்கு வரும்போது..என் மகள்அப்பா, அது ஒரு technique . கரிகாலனின் மனநிலையை கட்டுவதற்கான ஒரு வழிமுறை. இவ்வளவு தெளிவாக பாடல் காட்சிகளிலும் மற்ற இடங்களிலும் இருந்தத கேமரா சில காட்சிகள் மட்டும் அப்படி இருந்தால் கொஞ்சம் நாம் யோசிக்கலாம்என்றாள்.

இந்த தலைமுறை கொஞ்சம் தெளிவாகவே புரிந்து கொள்கிறது. படத்தை நம்பி பார்க்கின்ற தலைமுறையை என் கண் முன் பார்க்கிறேன். நீங்கள் அடிக்கடி சொல்வதை போல.. ‘கொஞ்சம் உழைப்பை கோரும் திரைப்படம் தான்.’ . என் மகளின் எண்ணங்களை எழுத சொன்னேன். உங்களிடம் பகிர்வதில் மகிழ்ச்சி.

அன்புடன்,
காளிராஜ் 

அன்புள்ள ஜெயமோகன்,

நலம் விழைகிறேன்.

பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு என் மகள்களை  – படம் பார்க்கும் போது இந்த வார்த்தைக்கு  என்ன அர்த்தம் என்று கேட்டுக்கொண்டே இருக்கக்கூடாதுஎன்ற முன்குறிப்புடன்தான் அழைத்துச்சென்றேன்ஆச்சரியமாக, அவர்கள் எதற்கும் பொருள் கேட்கவில்லை, மாறாக நகைச்சுவை வரிகளுக்கு சிரித்துக் கொண்டும் காட்சி விரிவிலும் கதையோட்டதிலும் முற்றிலும் கலந்துவிட்டிருந்தனர். ஆம், உண்மையாகவேஇடைவேளை வரும்போதும் எஞ்சியிருந்த சோளப்பொரியே சாட்சி

வீட்டிற்கு வந்து நானும் மனைவியும் எஞ்சிய கதையை பற்றி பேசிக்கொண்டிருக்கும் போது அதற்கு விழுந்த தடை படம் அதன் நோக்கத்தை எய்தியதற்கு மற்றுமொரு சான்றுஇரண்டாம் பாகம் சற்று மாதங்களுக்குப் பின்னரே வருமென்பதால்  இது நினைவில் நிற்க எழுதி வைத்துக்கொள்ள சொன்னேன். வழக்கமாக தயஙகுமவள் உங்களுக்கு அனுப்புவேன் என்றதும் கடிதமாகவே எழுதிவிட்டாள்.

படம் குறித்த உங்கள் உரைகளில் நீங்கள் சொன்ன சில முக்கியப் புள்ளிகளை அவள் கடிதத்தில் தொட்டிருக்கிறாள் என்பதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி.

இனி, அவள் கடிதம்.

என்றென்றும் அன்புடன்,

மூர்த்தி

டாலஸ்

On Saturday, October 1st, me and my family went to see ‘Ponniyin Selvan’. The movie was really interesting and I liked it very much. It also taught me a lot about that time period.

One of the people I liked very much is the ‘Oomai Raani’. I liked how the Prince Arunmozhi told the story of how the Oomai Raani saved his life since he was a baby and even in his current age in the story. I like how the stories of when the Oomai Raani saved the prince’s life were drawn on the wall of a cave. I also surprised how Queen Nandhini paid the Paandiya Aabathudhavi to kill Prince Arunmozhi, but at the end, the face of the Oomai Raani was the same face as the face of Queen Nandhini. This is something that makes it hard to wait for Part two. I think the Oomai Raani is the Mother of Queen Nandhini. I also wonder how she knew whenever Prince Arunmozhi was in trouble.

 Azhwarkadivan Nambi was really silly in a lot of his actions and dialogues. Even though he was funny he was really helpful to do things for example, to let Vandiyadevan know the background of Queen Nandhini. This mix in his personalities make him one of my favorite characters in the movie. I also know that he was a big devotee of Vishnu because the movie introduces Azhwarkadiyan Nambi in a fight about if Vishnu or Shivan was bigger. My father told me that they fought like this because in that time in India, there were no other religions so they found a reason to fight within the same religion and fought.

I thought for me that the old Tamil was going to be hard to understand, but was way easier than I thought it would be. This made it easier not only to understand what they were talking, but played a big role in my understanding of the movie. I also liked a lot of the lines that made the movie attractive. For example, when they introduced Pazhuvettarayar, they introduced him with the fact that he had 64 scars. I was laughing about it to my mother whether they counted them, because I found it funny. Later Pazhuvettarayar himself told Vandiyadevan if he had doubt about the number of scars that he could count it himself. I found this even funnier because it was like I was being replied to by Pazhuvettarayar. Another hilarious dialogue was when Vandiyadevan told Sendhan Amuthan, “Naan sethenaa, peiyaa vandhu un thondaya kadichu rethatha kudipen!”

I also found a lot of the visuals fascinating. The ships were definitely one of them. The tiger head in the front of one ship with an open mouth was a very nice carving, and also it was very hard to tell what was graphics and what was real in the movie. The Devaralan Aattam in the beginning was very nice too. Just before the Chola Chola song, the camera was wavering. I think this is to represent the wavering mind of Aadhithya Karikaalan.

In conclusion, I liked the movie ‘Ponniyin Selvan’ very much. Especially, the Oomai Raani, Azhwarkadiyan Nambi’s funny actions and the dialogues. I am very excited to watch part-2. I want to say to the whole team that they did an excellent job.

On Saturday, October 15, 2022, Meenakshi  Murthy

முந்தைய கட்டுரைஉறவுகள், கடிதம்
அடுத்த கட்டுரைமுகங்கள்