திருவிழாக்களை பண்பாட்டு அரசியலுக்கும், விடுதலை அரசியலுக்கும் பயன்படுத்திக்கொள்வதில் ஏராளமான முன்னுதாரணங்கள் நமக்குள்ளன. கேரளத்தில் இ.எம்.எஸ்.நம்பூதிரிப்பாடு ஓணம் திருவிழாவை மதச்சார்பற்ற கேரளவிழாவாக உருமாற்றம் செய்தார். அவர் கற்பனைசெய்த கேரளதேசியத்தின் விழா அது. அது அடித்தளமக்களின் விழா என்பது அவர் எண்ணம். இன்றைய ஓணம் அவ்வாறு மறுவரையறை செய்யப்பட்ட கொண்டாட்டம்.
தமிழகத்தில் பொங்கல் அப்படி மதச்சார்பற்ற விழாவாக திராவிட இயக்கத்தால் உருவாக்கப்பட்டது. அதற்கு முன் பொங்கல் அனைவருக்கும் உரிய விழாவாக இருக்கவில்லை. பொங்கல் விழாவை தமிழர்திருநாள் என உருமாற்றி மலேசியத்தமிழ் அடையாளத்தொகுப்புக்கு எவ்வாறு கோ.சாரங்கபாணி கருவியாக்கினார் என காட்டும் கட்டுரை இது
தமிழர் திருநாள் (மலேசியா)