முகங்கள்

அன்புள்ள ஜெ
வணக்கம். கடந்த 4 வருடங்களாக புகைப்பட கலையை கற்றுக்கொண்டிருக்கிறேன். உங்களுடைய “முகங்களின் தேசம்” படித்த பாதிப்பினால் மதுரை சுற்றி உள்ள பகுதிகளின் எளிய மனிதர்களின் (குறிப்பாக) வயதானவர்களை படம் எடுத்தேன். கிட்டத்தட்ட  நூற்றுக்கும் மேலானவர்களை படம் எடுத்து அதில் இருந்து 15 புகைப்படங்களை மட்டும் தேர்வு செய்து “City of Faces” என்று தலைப்பிட்டு என்னுடைய SPSA க்கு  (Silver level distinction from Photographic Society of America) அனுப்பினேன். நேற்று விஜய தசமி அன்று தேர்வாகி விட்டது என்ற செய்தி வந்தது.
உங்கள் இலக்கியம் தந்தது இது.

 நன்றி !

மூர்த்தி, துபாய்

அன்புள்ள மூர்த்தி,

விதவிதமான உணர்வுகளில் தேங்கித்துளித்திருக்கும் முகங்களைப் பார்க்கையில் ஒரு நாவலை ஒரே பரப்பில் ஒரு படமாகப் பார்க்கும் அனுபவம் அமைந்தது. சிறப்பான முயற்சி. வாழ்த்துக்கள்

ஜெ

முந்தைய கட்டுரைவலையிலும் வெளியிலும்
அடுத்த கட்டுரைசக்திவேல், கடிதம்