கொத்தமங்கலம் சுப்புவின் ஆளுமைச் சித்திரம் அசோகமித்திரனின் ஜெமினி ஸ்டுடியோ நினைவுகளில் வருகிறது. அந்நாட்களில் அவர் ஜெமினி கதையிலாகாவில் முக்கியப் புள்ளி. அவர் வீடு ஒரு பெரும் சத்திரம் போலிருக்கும். யார் யாரோ வருவார்கள். சாப்பிடுவார்கள். தங்கியிருப்பார்கள். கொத்தமங்கலம் சுப்பு அனைவருக்கும் புரவலர்.
கொத்தமங்கலம் சுப்புவை ஜெமினி எஸ்.எஸ்.வாசன் ஆனந்த விகடனில் அன்று எழுந்து அடித்த ‘கல்கிப் பேரலை’க்கு எதிராக நிறுத்தினார். (அப்போது கல்கி மறைந்துவிட்டிருந்தார். ஆனால் மறைந்த கல்கி மேலும் வலுவானவர்.) தில்லானா மோகனாம்பாள் கல்கியின் சரித்திரப் புனைவுகள் உருவாக்கிய மோகத்தை சரியாகவே எதிர்கொண்டது. அதன்பின் கல்கி மறைவு. ஆனந்தவிகடன் ஜெயகாந்தனை முன்வைக்க கல்கி நா.பார்த்தசாரதியை எதிர் நிறுத்த அந்தப் போரில் கல்கி வெல்லமுடியவில்லை.
கொத்தமங்கலம் சுப்பு