அன்புநிறை ஜெயமோகன் அவர்களுக்கு
வணக்கம். நாம் கோவை கொடிசியா புத்தகக் கண்காட்சியில் சந்தித்தவேளையில் சிவஞானசித்தியார் சுபக்கம் நூலாக்கம் பற்றிக் கூறுகையில் தங்களுடைய வலைதளத்தில் முன்பதிவுத் திட்டமாகப் பதிவிடலாம் என ஊக்கமளித்தமைக்கு முதற்கண் எனது நன்றி.
மேலும் தங்களின் மணிவிழாவில் சந்தித்தபொழுதும் நூலாக்கம் குறித்து விசாரித்த தங்களின் நினைவாற்றல் கண்டு வியப்பில் உறைந்தேன். இத்துடன் நூலின் முன்பதிவுத்திட்ட விபரத்தினை இணைத்துள்ளேன். நன்றி
என்றென்றும் அன்புடன்
அ.அருண்சீனிவாசன்.
*
ஆறாறு தத்துவமும் ஆணவமும் வல்வினையும்
நீறாக முத்திநிலை நிற்போர்க்குப் – பேறாகப்
பார்விரித்த நூலெல்லாம் பார்த்தறியின் சித்தியிலே
ஓர்விருத்தப் பாதி போதும் ’
எனத் தருமையாதீன குருமுதல்வர் சிவபோகசாரம் நூலில் அருளியுள்ளார். மேலும் தாயுமானவர்,
பாதிவிருத் தத்தால்இப் பார்விருத்தமாக உண்மை
சாதித்தார் பொன்னடியைச் சாரும்நாள் எந்நாளோ”
எனப் போற்றியுள்ளார். இத்தகு பெருமையுடைய நூலிற்குச் சித்தாந்த சரபம் மகாவித்துவான் முனைவர் சி அருணை வடிவேலு முதலியார் அவர்கள் செந்தமிழ் உரை வகுத்துள்ளார்கள்.
1999 ஆம் ஆண்டு வெளிவந்த இந்நூல் திருவருளால் 23 ஆண்டுகள் கழித்து அருள்நந்தி சிவனாரின் குருபூசை நாளான புரட்டாசித்திங்கள் பூரம் விண்மீன் அன்று முனைவர் அருணை பாலறாவாயன் அவர்களின் வழிகாட்டுதலுடன் கவின் பப்ளிகேசன்ஸ் நிறுவனம் வெளியிடுகிறது.
856 பக்கங்கள் கொண்ட இந்நூலின் விலை 850. முன்பதிவு திட்டத்தின் அடிப்படையில் 700 ரூபாய் மற்றும் அஞ்சல் செலவு ரூபாய் 100 இலவசம் என மொத்தம் 250 ரூபாய் சலுகையாக வழங்கப்படுகிறது.
தொடர்புக்கு அ. அருண்சீனிவாசன்
73958 666 99 / 94864 22641…
வங்கி விபரம் :
KAVIN PUBLICATIONS , UNION BANK OF INDIA, CHINNA VEDAMPATTI Branch ,
( IFSC : UBIN0827363 ) Current Account : 273611100001361..
UPI ID : Kavin2021@uboi…
phonepe & Gpay 73958 666 99