சிப்பியும் நீர்ப்பூச்சியும் – கடிதம்

நீர்ப்பூச்சியும் சிப்பியும் 

அன்புள்ள ஜெ,

நண்பர்களோடு பேசும்போது அல்லது வாட்ஸாப் விவாதங்களின்போதும் இப்போது வாசிக்கும் அல்லது முன்பு வாசித்த சில புத்தகங்களின் ரெபெரென்ஸ் கொடுக்கும்போது நண்பர்களிடம் கிண்டல்கள் வருவதுண்டு. புத்தகம் படித்தால் நீங்கள் அதையே சொல்லிக்கொண்டிருக்கிறீர்கள் என்பது போல. ஆனால் நமது சிந்தனையில் ஒரு சின்ன மாற்றமும் கொண்டுவராத புத்தகங்களை ஏன் நேரம் செல்வளித்து வாசிக்கவேண்டும் அவர்களைப் பார்த்து நான் ஆச்சர்யமடைவதுண்டு.

வருடம்தோரும் பெருமளவில் புத்தகம் வாசிக்கும் சில நண்பர்கள், பல வருடங்கள் ஒரே நிலைப்பாட்டில் அப்படியே இருப்பது மட்டுமல்லாமல் ஜோக் கூட பத்து வருடமாக ஒரே இடத்தில் இருப்பதை பார்க்கமுடியும். வாசிப்பு எனும் குளத்தில் மூழ்கினாலும் ஒரு துளி சிந்தனை கூட தன்மீது படமால் இருக்கும் கொக்கு போல என நினைப்பேன், ஆனால் நீங்கள் சொன்ன நீர்பூச்சி மிக பொருத்தமாக இருந்தது.

இந்தக் கட்டுரை படித்ததும் மிக பொருத்தமாகவும் உவப்பாகவும் இருந்தது.

நானும் நண்பர் ரவிகுமார்பாண்டியனும் நாங்கள் வாசிக்கும் தமிழ் மற்றும் ஆங்கில புத்தகங்கள் குறித்துப்பேசும்போது ஒரு கருத்தில் வந்தடைந்தோம்

  1. பல புத்தகங்களைஒரு சிந்தனைச் தொடர்ச்சியாக வைக்கமுடியும். அவை தனித்தனி புத்தகங்களாக இருந்தாலும் ஒரே சிந்தனையில் தொடர்ச்சி அல்லது அதன் பல்வேறு பரிணாமங்கள் என. (ஒருTree போல)  அப்படி தொகுத்துக்கொள்ளும்போது நம் புரிதல் ஆழமாவதோடு நிறைய படிக்கிறோம் என ஆயாசமும் வருவதில்லை.
  2. வாசிக்கத்தொடங்கும் எல்லாப் புத்தகங்களையும் முடிக்கவேண்டும் என்பது தேவையில்லை. வாசிப்பது எவ்வளவு முக்கியமாதோ, அதே அளவு முக்கியம் நமக்குத் தேவையில்லாத/நேரத்தை வீணடிக்கும் வாசிப்பை முடிந்த அளவு குறைப்பது.

நீர்ப்பூச்சியும் சிப்பியும் என்ற படிமம் உடனடியாக மனத்துக்குள் சென்றுவிட்டது

இந்தக் கட்டுரை மிக முக்கியமானது. வாசகர்கள் அனைவரும் வைத்துக்கொள்ளவேண்டிய ரெபரென்ஸ் இது. நன்றி ஜெ

அன்புடன்

சுரேஷ் பாபு

Blog: வேழவனம்

Youtube: https://www.youtube.com/channel/UCFiYtSqF4NvmnSjRCSf5XbQ

முந்தைய கட்டுரைசோழர், ஓர் உரை
அடுத்த கட்டுரைஅறம்- கடிதங்கள்