சங்கு சுப்ரமணியம், லட்டு மிட்டாய் வேணுமா?

ஜெமினி ஸ்டுடியோ 1949ல் தயாரித்த அபூர்வ சகோதரர்கள் என்னும் படத்தில் இடம் பெற்ற லட்டு லட்டு வேணுமா என்னும் இந்தப் பாடல் அக்காலத்தில் புகழ்பெற்றது. பானுமதி ஆடி பாடி நடித்தது. இதை எழுதியவர் சங்கு சுப்ரமணியம். தமிழிலக்கியத்தில் பெரும் பங்களிப்பாற்றிய சங்கு என்னும் இதழின் ஆசிரியர். சுதந்திரப்போராட்ட வீரர். சி.சு.செல்லப்பா உள்ளிட்ட பல இலக்கியவாதிகளை அறிமுகம் செய்தவர். இலக்கிய ஆளுமையாக மதிக்கப்பட்டவர்

சங்கு சுப்ரமணியம் இன்று பெரும்பாலும் மறக்கப்பட்டுவிட்டார். அவருடைய பங்களிப்பை சி.சு.செல்லப்பா அவருடைய எழுத்து இதழில் வெளியிட்ட சங்கு சுப்ரமணியம் நினைவுமலர் வழியாகவே நினைவுகூர முடிகிறது. சங்கு சுப்ரமணியம் நடிகரும்கூட.

சங்கு சுப்ரமணியம் 

சங்கு சுப்ரமணியம்
சங்கு சுப்ரமணியம் – தமிழ் விக்கி

முந்தைய கட்டுரைஒரு முக்கியமான முன்னெடுப்பு
அடுத்த கட்டுரைதற்கல்வியும் தத்துவமும்-5