புதுவையில் பேசுகிறேன்.

கரசூர் பத்மபாரதி – விக்கி

புதுச்சேரி விஷ்ணுபுரம் இலக்கியவட்ட நண்பரும்,  புதுச்சேரியில் வெண்முரசு வாசிப்பரங்கை தொடர்ச்சியாக நடத்திவருபவருமான கிருபாநிதி அரிகிருஷ்ணன் அவர்களின் அறுபதாவது அகவைநிறைவு வரும் அக்டோபர் 13 அன்று நிகழ்கிறது. அதை ஓர் இலக்கிய – பண்பாட்டுவிழாவாக நடத்துகிறார்கள்.

பண்பாடு  மற்றும் சமூக தளத்தில் நிகழ்த்திய இரு ஆய்வுகளுக்காக கரசூர் பத்மபாரதி அவர்களுக்கு தமிழ் விக்கி பெ.தூரன் விருது வழங்கி கௌரவித்ததையொட்டி “புதுவை வெண்முரசு கூடுகை”  நடத்தும் பாராட்டு விழா இரண்டு அமர்வுகளாக நிகழ இருக்கிறது. முதல் அமர்வு. வைணவங்கள் என்கிற தலைப்பில் எழுத்தாளர் ஜெயமோகன் உரை நிகழ்த்துகிறார்.

இரண்டாம் அமர்வு நரிக்குறவர் இனவரைவியல் நூல் குறித்து. எழுத்தாளர் சுரேஷ் பிரதீப், திருநங்கையர் சமூக வரைவியல் நூல் குறித்து. எழுத்தாளர் காளிப்ரஸாத், அறிவுத் தளத்தில் பண்பாட்டு ஆய்வு மற்றும் சமூக ரீதியில் இரு நூல்களின் முக்கியத்துவம் குறித்து கட்டுரையாளர் கடலூர் சீனு.

வாழ்த்துரை மாண்புமிகு நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் திரு.S.செல்வகணபதி அவர்கள்.

மாண்புமிகு புதுவை பொதுப்பணித்துறை அமைச்சர் திரு.K.லட்சுமிநாராயணன் அவர்கள்

சிறப்புரை:- எழுத்தாளர் ஜெயமோகன்

ஏற்புரை:- கரசூர் பத்மபாரதி

நிகழ்வில் கலந்து கொள்ள புதுவை வெண்முரசு கூடுகை சார்பில் வேண்டுகிறோம்.

நாள்:- 13.10.2022 வியாழக்கிழமை

நேரம்:-  மதியம் 2:30 மணிக்கு

இடம்:- ஹோட்டல் சன்வே, சுபம் அரங்கு,100 அடி சாலை (மூப்பனார் சிலை அருகில்)

புதுவை

தொடர்புக்கு : மணிமாறன் 9943951908, தாமரைக்கண்ணன். 9940906244

முந்தைய கட்டுரைஒளிரும் பாதை
அடுத்த கட்டுரைபைபிள் கதைகள்