மோகனாங்கி, பொன்னியின் செல்வன் யுகத்தில்…

முதல் தமிழ் வரலாற்று நாவலான மோகனாங்கியை தமிழ் வரலாற்றுநாவல் பொன்னியின் செல்வன் இந்தியா முழுக்க லட்சக்கணக்கான பிரதிகள் விற்கப்படும் இச்சூழலில் நினைவூட்டவேண்டியிருக்கிறது. ஈழத்தமிழரான இதன் ஆசிரியர் தி. த. சரவணமுத்துப் பிள்ளை மிக இளமையிலேயே (37  வயதில்)  மறைந்துவிட்டார். தமிழறிஞர், பதிப்பாசிரியர் தி. த. கனகசுந்தரம் பிள்ளையின் தம்பி இவர். கனகசுந்தரம் பிள்ளை உ.வே.சாமிநாதையருக்கு தொல்காப்பியம் உள்ளிட்ட நூல்களின் ஏடுகளை அளித்தவர்.

ஏறத்தாழ நூறாண்டுகள் பதிப்பில் இல்லாமலிருந்த படைப்பு. பொன்னியின் செல்வன் போல வரலாற்றுக் கற்பனாவாத நாவல் (Historical Romance ) அல்ல ,வரலாற்று நாவலேதான் (Historical Novel) . நூற்றிமுப்பது ஆண்டுகளானாலும் இன்றும் சரளமாக வாசிக்கும் நடை கொண்டது. பொன்னியின் செல்வனுக்கு பின் உடனடியாக சினிமாவாக எடுக்கத்தக்க சரித்திர நாவல் எது என்றுகேட்டால் தயங்காமல் மோகனாங்கி என்றுதான் சொல்வேன்.

மோகனாங்கி

மோகனாங்கி
மோகனாங்கி – தமிழ் விக்கி
முந்தைய கட்டுரைஅருண்மொழி உரை -கடிதம்
அடுத்த கட்டுரைகாழ்ப்புகளுக்கு முன் செயலுடன் நிற்றல்