நா.பார்த்தசாரதி – இலட்சியக் கனவுகள்

திடீரென்று ஒருநாள் நள்ளிரவில் ஒரு விசித்திரமான ஏக்கம் எழுந்தது. நா.பார்த்தசாரதியின் ஒரு படத்தைப் பார்த்தேன். என் பத்தாவது வயதில் நான் நா.பார்த்தசாரதியின் நான்கு நாவல்களை படித்தேன். குறிஞ்சிமலர், பொன்விலங்கு, சமுதாயவீதி. அவற்றில் இருந்த இலட்சியமாந்தர் என்னை பெரும் பரவசத்திலாழ்த்தினர். அந்தக் கனவை நான் இன்னமும் நீட்டித்துக்கொண்டே இருக்கிறேன்.

அந்நாவல்களை இன்று என்னால் வாசிக்க முடியுமா, அந்த நாவல்களின் கற்பனாவாதமும் மிகையெளிமையும் என்னால் ரசிக்கப்படுமா என தெரியவில்லை. ஆனால் கனவுகள் நிறைந்த ஒரு காலகட்டத்தின் முழக்கம் அந்நாவல்கள் என இன்று நினைக்கிறேன். அத்தகையவர்கள் அன்று வாழ்ந்திருக்கின்றனர்.

பூரணி இன்று இருந்தால் எண்பது கடந்திருக்கும். கனிந்த முதியவராக இருப்பார்.

நா.பார்த்தசாரதி

நா.பார்த்தசாரதி
நா.பார்த்தசாரதி – தமிழ் விக்கி
முந்தைய கட்டுரைசின்னஞ்சிறிய கிளி
அடுத்த கட்டுரைசலிப்பு, மீள்வு