ஆதவன், சிருங்கேரி

1987ல் நான் ஆதவனின் என் பெயர் ராமசேஷன் நாவலை நர்மதா பதிப்பக அலுவலகத்தில் இருந்து வாங்கி ரயிலில் படித்தபடி காசர்கோடு சென்றேன். இருபதுநாட்களுக்குள் அவர் சிருங்கேரியில் ஆற்றுவெள்ளத்தில் மறைந்ததை அறிந்தேன். அன்று அது ஒரு துணுக்குறல்.

பின்னர் சிருங்கேரி செல்லும்போதெல்லாம் அந்த சிறு துணுக்குறல் உருவாகும். அண்மையில் சிருங்கேரி சென்றபோதும் ஆதவனை நினைத்துக்கொண்டோம். ஆதவன் என் வாசிப்பில் முக்கியமான எழுத்தாளர் அல்ல. பொதுவாசிப்புத் தரத்துக்கு சற்று மேல் என்று சொல்லத்தக்க தரம் கொண்டவை அவர் ஆக்கங்கள். அன்றைய பொதுமோஸ்தரான சிந்தனைகளால் உருவாக்கப்பட்டவை. இன்று, அந்த காலகட்டம் பின்சென்ற பின் அவை மேலும் ஒளிமங்கியிருக்கின்றன. ஆனாலும் அந்த சாவினால் அவர் நினைவில் எப்போதுமிருக்கிறார்

ஆதவன்

ஆதவன்
ஆதவன் – தமிழ் விக்கி
முந்தைய கட்டுரைபெண் என்றும் இயற்கை என்றும் உள்ள பேராணவம்
அடுத்த கட்டுரைஉளத்திட்பம் என்பது…