ஏ.வி.தனுஷ்கோடி, அஞ்சலி

அன்பின் ஜெ.

தாங்கள் எழுதும் கட்டுரைகள், பரிந்துரைகள்இன்னும் சொல்லப்போனால் நினைவு அஞ்சலிக் குறிப்புகள் வழியாகவும் மறக்கப்பட்ட, அவ்வளவாக கவனிக்கப்படாத பல்வேறு இலக்கிய ஆளுமைகள், அறிஞர் பெருமக்கள், கலைஞர்கள், செயல்பாட்டாளர்கள் பலரைக் குறித்தும் தங்களின் வாசகர்கள் பலரைப் போலவே நானும் அறிந்து வந்திருக்கிறேன். ஃப்ரன்ஸ் காஃப்காவின்விசாரணைநாவலை – ஆங்கிலத்திலும் சரி, அதன் தமிழ் பதிப்பு என்கிற வகையிலும் சரி, மிக முக்கியமான ஆக்கம். ஜெர்மன் மொழியிலிருந்து நேரடியாக தமிழுக்கு மொழியாக்கம் செய்த ஏ.வி.தனுஷ்கோடி கடந்த வாரம் இறந்து போயிருக்கிறார்.

இது ஏதோ இன்று / நேற்று வந்த மொழிபெயர்ப்புமல்ல. முப்பதாண்டுகளுக்கு முன்பு வந்து பெரிதும் பேசப்பட்ட படைப்பு. அதுவுமில்லாமல் நாடகம் என கலைத்துறையில் தீவிரமாக இயங்கியவ்ரும்கூட. முன்னேற்றப் பதிப்பகமும், ராதுகாவிலிருந்து பெருமளவு இறக்குமதியான ருஷ்ய செவ்விலக்கியத்தின் செல்வாக்கிற்கு ஈடானகுறிப்பாக தமிழ் மொழிபெயர்ப்பு இலக்கியத்திற்கு கொடையளித்தவர் .வி.தனுஷ்கோடிசென்னை மேக்ஸ் ம்யுல்லர் பவனிலிருந்து இணைந்து செயல்பட்ட  ஜி.கிருஷ்ணமூர்த்தியின் நண்பராக இருந்திருக்கிறார்.

பெரும் எழுத்தாளர்கள் யாருமே ஒரு வரி எழுதாத நிலையில், கௌதம சித்தார்த்தன் எழுதிய குறிப்புகளிலிருந்துதான் இவர் இறந்துபோனதை அறிய நேர்ந்தது. வண்ணநிலவன் போன்றவர்கள் இவருடைய நூல் குறித்து முன்பு எழுதியிருந்ததாக படித்த நினைவு. எல்லோருடனும் தங்களுக்கு முன் அறிமுகம் இருந்திருக்க வேண்டுமென்று நான் எதிர்ப்பார்க்கவில்லை என்றாலும், மொழிபெயர்ப்பு இலக்கியம் என் கர்மபூமி என்று நான் இன்று வந்து நிற்பதற்கு ஏதோ ஒரு இருபத்தி ஐந்து ஆண்டுகள் முன்பு படித்த ஏ.வி.தனுஷ்கோடியும் ஒரு காரணம்.

எளிய வாசகனான எனக்கு அவர் முக்கியமானவராக தோன்றுகிறாரோ என்னமோ, ஆனால் அந்த 80களின் பிற்பாதி, 90களின் முற்பாதியிலிருந்து எழுதிக் கொண்டிருக்கும் பலரும் அவரை மறந்துவிட்டிருப்பது வேதனையாக இருந்தது. அது போக ஏ.வி.தனுஷ்கோடியின் முகநூலில் வெறுமனே சமஸ்சும், வெங்கடேஷ் சக்ரவர்த்தி மட்டுமே நண்பர்களாக இருந்ததும் எனக்கு வியப்பை அளித்தது.

உண்மையிலேயே தங்களுக்கு இந்த இறப்புச் செய்தி கிடைக்கவில்லை என்றே மனம் இன்னமும் நம்புகிறது. முடிந்தால் பதில் எழுதவும்.

நன்றி

கொள்ளு நதீம்

*

அன்புள்ள கொள்ளுநதீம்,

எனக்குச் செய்தி தெரியவில்லை. விசாரணை அவருடைய மொழியாக்கத்தை பார்த்திருக்கிறேன்.

ஜெ

ஏ.வி.தனுஷ்கோடி – கௌதமசித்தார்த்தன் கட்டுரை 1

ஏ.வி.தனுஷ்கோடி – கௌதமசித்தார்த்தன் கட்டுரை2

முந்தைய கட்டுரைவெந்து தணிந்தது காடு – முகங்கள்
அடுத்த கட்டுரைகோவை, சொல்முகம் வெண்முரசு கூடுகை 21