சியமந்தகம், கடிதங்கள்

சியமந்தகம் தொகைநூல் வாங்க

கோவையில் ஜெ 60 விழா- ஒரு நிறைவான நாள்

நன்றிகளும் வணக்கங்களும்

வணக்கம் ஜெ.

எங்கும் வெளிச் செல்ல வாய்ப்பதில்லை. என் சூழல் அப்படி. ஆனாலும் எல்லாவற்றையும கவனித்துக் கொண்டுதான் இருக்கிறேன்.

உங்கள் ஜெ.60 விழா நிகழ்வுகள் அனைத்தும் அறிந்தேன். பார்த்தேன். வண்ணதாசனுடனான நெருக்கத்தையும் நெகிழ்வோடு உணர்ந்தேன். கூட்டம் நிறைந்து வழிய அதில் என்னையும் ஒருவனாக உணர்ந்தேன்.

விழாவுக்கு வராத குறையைத் தீர்க்க  சியமந்தகம் ஆர்டர் பண்ணினேன். விஷ்ணுபுரம் புக்ஸ் அனைத்தையும் வரிசையாக வாங்கிக் கொண்டிருக்கிறேன். ஒவ்வொன்றாகப் படித்துக் கொண்டிருக்கிறேன்.

விழாவில் உங்கள்துணைவியாரோடு நின்ற படங்களில் இணைத்துள்ள இரு படங்கள் மனதுக்கு இதம்.

நான் வயதில் பெரியவன். என் உளமார்ந்த…ஆசிகள் உங்களுக்கு.

நன்றி

உஷாதீபன்

***

அன்புள்ள ஜெ

சியமந்தகம் தொகுப்பு கண்டேன். மிகச்சிறப்பான கட்டமைப்பு. முக்கியமான ஒரு தொகுப்பு. இந்தப் பெரிய நூலை ஏன் வாங்கவேண்டும்? இது உடனடியான முழு வாசிப்புக்கு உரிய நூல் கிடையாது. ஆங்காங்கே கட்டுரைகளை எடுத்து வாசிக்கலாம். அந்தக்கட்டுரைகள் இணையத்திலும் உள்ளன. ஆனால் கையில் எல்லா கட்டுரைகளும் அச்சில் இருப்பது ஒரு பெரிய விஷயம்

அதைவிட இத்தகைய அரிய நூல்கள் பெரும்பாலும் மறு அச்சு வருவதில்லை. இவை அந்தந்த தருணங்களுக்காக தயாரிக்கப்படுபவை. கி.ராஜநாராயணனுக்கு 60 நிகழ்ந்தபோது வெளிவந்த ராஜநாராயணீயம் அத்தகைய ஒரு அரிய நூல். சுந்தர ராமசாமிக்கும் அசோகமித்திரனுக்கும் அறுபது நிகழ்ந்தபோது நீங்கள் மலர்கள் கொண்டுவந்தீர்கள் அவையும் அரிய சேமிப்புகள்.

இந்நூல் மிகச்சிறப்பாக வந்துள்ளது. சம்பிரதாயமான வாழ்த்தோ, கட்டுரையோ ஒன்றுகூட இல்லை. எல்லாமே பயனுள்ள ஆழமான கட்டுரைகள்.

ராஜ்கண்ணன்

முந்தைய கட்டுரைவிஷ்ணுபுரம் வெளியீடாக வந்துள்ள நூல்கள்
அடுத்த கட்டுரைதிருமா, கடிதம்