கண்ணீரின் பாதை

கண்ணீரைப் பின்தொடர்தல்  வாங்க

கண்ணீரைப் பின்தொடர்தல் மின்னூல் வாங்க 

கண்ணீரைப் பின்தொடர்தல் என்ற இந்த நூலை எழுதுவதற்கு காரணம் இரண்டு உந்துதல்கள். ஒன்று என்னுடைய நாவல் கோட்பாடு என்னும் நூலும் அது உருவாக்கிய பின்னணி விவாதமும். தமிழில் எழுதப்பட்டவை நவீனத்துவ பாணியிலான குறுநாவல்கள் அல்லது தொடர்கதைகள் மட்டுமே என்றும் நாவல் என்னும் தனித்த வடிவம் தமிழில் பெரும்பாலும் அடையப்படவில்லை என்றும் நான்  கூறிய கருத்து தொண்ணூற்று ஒன்றில் பெரிய விவாதத்துக்குள்ளாகியது அதை ஒட்டி நான் நாவல் கோட்பாடு என்ற நூலை எழுதினேன்.

நாவல் என்பது அடிப்படையான மையக்கேள்வி ஒன்றை சாத்தியமான அனைத்துக்களங்களிலும் விரித்துக்கொள்ளும் தொகுப்புத்தன்மையுடன் எழுதப்படுவது என்பது எனது தரப்பு. இந்திய மொழிகளில் தலைசிறந்த நாவல்கள் உள்ளன.  அவை தமிழில் கிடைக்கின்றன என்று அந்த விவாதத்தின்போது நான் சொன்னேன். அதன் பிறகு அவற்றை முன்வைக்கும்பொருட்டு சிறுகுறிப்புகளை ஆங்காங்கே எழுதினேன். அக்குறிப்புகளை விரிவுபடுத்தி எழுதப்பட்டது இந்நூல். இந்திய மொழியில் தலைசிறந்த நாவல்கள் என்று நான் எண்ணும் ஆரோக்ய நிகேதனம், மண்ணும் மனிதரும், சிக்கவீர ராஜேந்திரன், ஏணிப்படிகள் போன்றவற்றை இந்நூலில் முன்வைக்கிறேன்.

ஒரு  இந்திய தரிசனத்தை அளிக்கவேண்டும் என்னும் நோக்கத்துடன் ஒவ்வொரு மொழிக்கும் சிலநாவல்கள் என தெரிவு செய்ததனால் பல நாவல்கள் இப்பட்டியலில் வராமல் போயின. உதாரணமாக தாகூரின் கோரா எனக்கு மிகப்பிடித்த நாவலாயினும் இந்நூலில் அதைப்பற்றிய கட்டுரை இல்லை. இந்நூல் இந்தியாவின் வெவ்வேறு மொழிகளிலிருந்து இருபது நாவலாசிரியர்களின் படைப்புகளை முன்வைக்கிறது. அவற்றைப்பற்றிய ரசனைக்கட்டுரை என்று இவற்றை சொல்லலாம். அவை ஏன் மகத்தான நாவல்களாக இருக்கின்றன என்பதையே இக்கட்டுரைகள் ஆராய்கின்றன. எழுதப்பட்டு பல ஆண்டுகளுக்குப்பிறகு இக்கட்டுரைகள் அண்மையில் கனலி இணைய தளத்தில் மறுபிரசுரம் செய்யப்பட்டன. மீண்டும் அடுத்தடுத்த தலைமுறையால் இவை படிக்கப்படுகின்றன என்பதே இக்கட்டுரைகளின் தேவைக்கும் தரத்திற்கும் சுவாரசியத்திற்கும் சான்று என்று நினைக்கிறேன். இவை படைப்பாளி, படைப்பு,  அது உருவான களம் ஆகிய மூன்றையும் ஒரே பார்வையில் பார்க்கும் தன்மை கொண்டவை. ஆகவே அந்நூல்களை மிக விரிந்த களத்தில் வைத்து வாசகன் அணுக முடியும்.

உண்மையில் இந்நூல் வெளிவந்த காலத்தில் இதில் பேசப்படும் பல நூல்கள் இலக்கிய வாசகர்கள் கவனத்தில் படாமல் மறைந்துவிட்டிருந்தன. அக்னி நதி போன்ற நூல்கள் சில பிரதிகள் கூட விற்கப்படாமல் தேங்கி பல பத்தாண்டுகளாகக் கிடந்தன. இந்நூல் அந்நாவல்களை புத்துயிர் பெறச்செய்தது. அக்னி நதி வெறும் ஐந்து ரூபாய்க்கு -பத்தில் ஒரு பங்கு விலைக்கு -இந்நூல் வெளிவந்த காலகட்டத்தில் கிடைத்தது. இன்று பெரும்பாலான படைப்புகள் மறுபதிப்பாக வெளிவந்துவிட்டன. இன்றைய தலைமுறையில் பெரும்பாலான இளம் வாசகர்கள் இவற்றைப் படித்திருக்கிறார்கள். நீலகண்ட பறவையைத்தேடி, ஒரு குடும்பம் சிதைகிறது போன்ற பல படைப்புகள் தமிழ்ப் படைப்புகளுக்கு நிகரான இலக்கிய வாசிப்பை இன்று பெற்றிருக்கின்றன.

இவ்வாறு இந்திய செவ்வியல்நோக்கி தமிழ் நவீன வாசகனை திருப்புவதில் இந்நூல் அடைந்த வெற்றி இத்தனை ஆண்டுகளுக்கு பிறகு பெருநிறைவை அளிக்கிறது. இதை முதலில் வெளியிட்ட உயிர்மை பதிப்பகம் மனுஷ்யபுத்திரனுக்கும் இப்போது வெளியிடும் விஷ்ணுபுரம் பதிப்பகத்திற்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

ஜெ

05.07.2022

குமரித்துறைவி வாங்க
வான் நெசவு சிறூகதைத்தொகுப்பு வாங்க
பத்துலட்சம் காலடிகள் சிறுகதைத்தொகுப்பு வாங்க
தங்கப்புத்தகம் சிறுகதைத்தொகுப்பு வாங்க
ஆயிரம் ஊற்றுகள் சிறுகதைத்தொகுப்பு வாங்க
வாசிப்பின் வழிகள் வாங்க
ஆனையில்லா சிறுகதைத்தொகுப்பு வாங்க
ஐந்து நெருப்பு சிறுகதைத்தொகுப்பு வாங்க
தேவி சிறுகதைத்தொகுப்பு வாங்க
அந்த முகில் இந்த முகில் – நாவல் வாங்க
எழுகதிர் சிறுகதைத்தொகுப்பு வாங்க
முதுநாவல் சிறுகதைத்தொகுப்பு வாங்க
பொலிவதும் கலைவதும் சிறுகதைத்தொகுப்பு வாங்க
பின்தொடரும் நிழலின் குரல் அச்சுநூல் வாங்க
இருகலைஞர்கள் சிறுகதைத்தொகுப்பு வாங்க
மலை பூத்தபோது சிறுகதைத்தொகுப்பு வாங்க
இலக்கியத்தின் நுழைவாயிலில் அச்சு நூல் வாங்க
நத்தையின் பாதை அச்சு நூல் வாங்க
மைத்ரி நாவல் வாங்க
ஆலயம் எவருடையது ஆன்லைனில் வாங்க
இந்துமெய்மை ஆன்லைனில் வாங்க
சாதி – ஓர் உரையாடல் ஆன்லைனில் வாங்க
வணிக இலக்கியம் ஆன்லைனில் வாங்க
ஈராறுகால் கொண்டெழும் புரவி ஆன்லைனில் வாங்க
கதாநாயகி ஆன்லைனில் வாங்க
ஒருபாலுறவு ஆன்லைனில் வாங்க
அனல் காற்று ஆன்லைனில் வாங்க
வெண்முரசு – நீர்ச்சுடர் (23) வாங்க
ஞானி ஆன்லைனில் வாங்க
நான்காவது கொலை ஆன்லைனில் வாங்க
விசும்பு ஆன்லைனில் வாங்க
வெண்முரசு – களிற்றியானை நிரை (24) வாங்க
முந்தைய கட்டுரைதேவாங்கர்
அடுத்த கட்டுரைகே.நல்லதம்பியின் யாத் வஷேம்