ச.வே.சுப்ரமணியம், தமிழூர்

சென்ற தலைமுறை தமிழறிஞர்களிடம் இருந்த தீவிரமான தமிழ்ப்பற்று வியப்புக்குரியது. இன்று அவ்வுணர்வு பெரும்பாலும் இல்லை. இன்று தமிழ் என்பது அரசியல் அதிகாரம் அல்லது கல்வித்துறை அதிகாரத்துக்கான ஒரு வழி. அதிகார வழிபாடு செய்பவர்கள் மேலேறுந்தோறும் மெய்யான தமிழறிஞர்கள் மதிப்பிழந்து மறக்கவும் படுகிறார்கள்.

பேரா.ச.வே.சுப்ரமணியம் தன் முழுச்சேமிப்பையும் ஓய்வுபெற்றபின் தமிழுக்காகச் செலவிட்டார். பாளையங்கோட்டை அருகே நிலம் வாங்கி தமிழூர் என்னும் சிற்றூரை உருவாக்கினார். ஆய்வுநூலகம் உருவாக்கி, வந்து தங்கும் ஆய்வாளர்களுக்கு உதவித்தொகையும் அளித்தார். அவருக்குப்பின் அம்முயற்சி என்னவாயிற்று என்று தெரியவில்லை

ச.வே.சுப்ரமணியம்

ச.வே.சுப்ரமணியன்
ச.வே.சுப்ரமணியன் – தமிழ் விக்கி
முந்தைய கட்டுரைகல்வெட்டுகள், ஒரு தரவுத்தளம்
அடுத்த கட்டுரைபுதுவை வெண்முரசுக் கூடுகை,52