சாரு, கடிதங்கள்

அன்புள்ள சாரு , அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கும் ,

தங்களிருவரின் வாசகராகிய எனது பணிவான வணக்கங்கள்

2005-ல் எனக்கு சாருவின் எழுத்து அறிமுகமானது. அப்போது தினமலர் இணையதளத்தில் சாருவின் இணைய முகவரி கொடுக்கப்பட்டிருந்தது. 2005-2008-ல் என் வாழ்வில் நடந்த துயரங்களுக்கு சாருவின் எழுத்து அருமருந்தாகவும் வலி நிவாரணியாகவும் இருந்தது.

அந்த சமயத்தில் வெளிப்பார்வைக்கு இலக்கிய வம்பாக சாரு ஜெயமோகனை பற்றி எழுதிய பதிவுகள் மூலமாக ஜெயமோகன் எழுத்து எனக்கு அறிமுகமானது. சாருவின் எழுத்துக்கள் (புனைவு & புனைவுகள்) எனக்கு எப்படி பிடித்ததோ அது போல ஜெயமோகனின் எழுத்துக்களும் (புனைவு & புனைவுகள்என்னை வசீகரித்து கொண்டது

வெளிப்பார்வைக்கு தங்களுக்குள் தனிப்பட்ட இலக்கிய வம்பு என பொது சமூகம் நினைத்தாலும், நீங்கள் இருவரும் ஒரு சில தருணங்களில் சொன்னது போல நீங்கள் இருவரும் இரு வேறு “school of thought ” சேர்ந்தவர்கள்.

நீங்கள் அவ்வாறு கூறுவதற்கு முன்பே, என்னை போன்ற ஒரு அடிப்படை வாசகனாக முயற்சிக்கும் எளிய சாமானியன் / பொது ஜனத்திற்கு, நீங்கள் இருவரும் இரு வாத்தியார்கள் (masters ). ஜெயமோகன்கணக்கு வாத்தியார் (strict , absolute, calculated etc.,). சாரு நிவேதிதாஇயற்பியல் வாத்தியார் (both strict, absolute, calculated etc. and also new imaginations (like stephen hawking), acceptance of all values etc ).

ஜெயமோகன் அவர்களின் கல்வி குறித்த பல்வேறு விவாதங்களும் எண்ணங்களும் எனது இளைய மகனது கல்வி குறித்த எனது / எனது மனைவியின் பல கவலைகளுக்கு அரு மருந்தாக மற்றும் ஒரு மாற்றுப்பார்வை கொடுத்தது.

சாருவின் எழுத்து எனது இளைய மகனிடம் மேலும் அன்பாக இருக்க கற்று கொடுத்தது. சாரு தனது லேப்ரடார் குழந்தை பற்றி எழுதும் பொழுது எனது இளைய மகனே எனக்கு ஞாபகம் வருவான்.

( குறிப்பு : எனது மனைவி மிக எளிய பெண். பட்டதாரி ஆனாலும் புத்தகம் / கட்டுரை /கதைகளை வாசிக்க மாட்டார். நான் புத்தகம் வாங்குவதை விரும்பாதவர். நான் சிறு வயதில் இருந்தே பத்திரிக்கை / வார /மாத இதழ் வாசிப்பவன். மேலும் நான் கணிப்பொறி மென்பொருள் வடிவமைப்பு மற்றும் உருவாக்கத்தில் வேலை செய்வதால் தங்கள் இருவரது எழுத்துக்களும் எனக்கு ஒரு வகையில் stress-buster மற்றும் எனது creativity-யை கூர் செய்கிறது. சக மக்களை பற்றிய empathy அதிகரிக்க செய்கிறது ).

நான் பெங்களூரில் உள்ள ஒரு கலை, வடிவமைப்பு மற்றும் தொழில்நுட்பம் கல்லூரியில் (Srishti Manipal Institute of Art, Design and Technology (http://www.srishtimanipalinstitute.in/) Lead Software Architect –ஆக (Non-Teaching) பணியில் உள்ளேன். எனது கல்லூரியில் சில எழுத்தாளர்களும் கவிஞர்களும் மாணவர்களுக்கு பாடம் கற்பிக்கின்றனர். கேசவா மாலகி (https://en.wikipedia.org/wiki/Keshava_Malagi) மற்றும் மம்தா சாகர் (https://en.wikipedia.org/wiki/Mamta_Sagar). அவர்களது படைப்புகளை நான் வாசிக்கா விட்டாலும் , அவர்கள் என்னிடம் IT/computer/assessment software குறித்து தெளிவு பெற வரும் போது தங்கள் இருவரின் ஞாபகம் வரும். என்னை [பொறுத்த வரை உங்கள் இருவரை போல படைப்பூக்கம்/creativity நிறைந்தவர்கள் சரஸ்வதி தேவியின் அருள்/கடாக்ஷம் பெற்றவர்கள். உங்களை போல படைப்பவர்களை நான் வாழும் சரஸ்வதி தேவி என்றே கருதுகிறேன்.

ஆகையால் கேசவா மாலகி, மம்தா சாகர் மற்றும் எனது கல்லூரியில் பணியாற்றும் இதர படைப்பாளிகளை (including artists/designers/musicians), சரஸ்வதி தேவி என் எதிரில் வந்தால் எவ்வாறு நான் மதிப்பு/மரியாதையுடன் நடந்து கொள்வேனோ அவ்வாறு நானும் நடந்து கொள்வேன். இந்த மரியாதையை நான் தங்கள் இருவரிடமும் இருந்து கற்று கொண்டதை ஒரு பெரும் பேராக கருதுகிறேன்.

எனது நீண்ட கால நண்பர் மற்றும் எனது கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றும் திரு. அஜய் நரேந்திரனிடம் தங்கள் இருவரது எண்ணங்கள் எழுத்துக்கள் குறித்து பேசுவதும் விவாதிப்பதும் உண்டு. அஜய் நரேந்திரன், மலையாளி, பெரும்பாவூர்காரர். நாயர்(மேனன்) சாதியை சேர்ந்தவர் என்றாலும், அவர் 10th படிக்கும் போது மார்க் சீட்டில் வரும் பெயர் குறித்து பள்ளி ஆசிரியர் வகுப்பில் கேட்கும் போது தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்த சக மாணவ நண்பன் சங்கடப்படுவதை கண்டு தன்னுடைய மேனன் சாதி பெயரை சேர்க்க வேண்டாம் என்று ஆசிரியரிடம் சொன்னவர். அஜய் – Inclusive & sympathetic to marginalized, disenfranchised people/women in society. தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் தேனப்பன் அஜயுடன் 10th படித்தார்

அஜய் சிறந்த புத்தகம் வாசிப்பவர். தனது வீட்டில் ஒரு தனிப்பட்ட நூலகம் அமைத்துள்ளனர் (Photo:https://www.facebook.com/photo.php?fbid=10158628776577606&set=pb.671497605.-2207520000..&type=3). எங்கள் கல்லூரி மாணவர்களை வாசிப்பு நோக்கி நகர்த்துவதை தனது ஒரு லட்சியமாக கொண்டவர். மாணவர்களிடம் தனது தனிப்பட்ட சேகரிப்பில் உள்ள புத்தகங்களை கொடுத்து வாசிக்க சொல்பவர்.

அஜய்க்கு தமிழ் பேச தெரியும். ஆனால் வாசிக்க தெரியாது.

ஜெயமோகனின் அறம் தொகுப்பு , எனக்கு மிகவும் பிடித்த புத்தகங்களில் ஒன்று.

ஜெயமோகனின் Stories of the True புத்தகம் முன்பதிப்பு வெளிவரும் போது அஜய்யின் நூலகத்திற்கு ஒரு பிரதியை முன் பதிவு செய்து பெற்று கொடுத்தேன்.

எனது மனசாட்சி அப்போது சாருவின் ஆங்கில புத்தகங்களும் அஜயின் நூலகத்தில் இருக்க வேண்டும் என்று சொன்னது. ஆகையால் சாரு நிவேதிதாவின் Marginal Man, Zero Degree, To Byzantium,Towards A Third Cinema and Unfaithfully Yours புத்தகங்களை zero degree publishing-ல் ஆர்டர் செய்து அஜய்யின் நூலகத்திற்கு கொடுத்தேன்.

அஜய்யின் மூலம் தங்கள் இருவரது எழுத்துக்களும் எங்கள் கல்லூரியின் மற்ற மாநிலம் / மற்ற நாட்டை சேர்ந்த மாணவர்களுக்கும், பேராசிரியர்களுக்கும் (artists, designers, poets & writers) சென்று சேர வேண்டும் என்பது எனது சிறிய ஆசையான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்.

விஷ்ணுபுரம் விருது,2022 பெற்றதிற்காக சாரு நிவேதிதாவிற்கு எனது வாழ்த்துக்கள். சாரு நிவேதிதாவை தேர்ந்தெடுத்ததிற்காக ஜெயமோகன் அவர்களுக்கும் விஷ்ணுபுரம் வாசக நண்பர்களுக்கும் எனது நன்றி.

இயற்கையின் ஆணையா அல்லது சரஸ்வதி தேவியின் திருவிளையாடலா என்று தெரியவில்லை. சாரு நிவேதிதாவிற்கு விஷ்ணுபுரம் விருது 2022 அறிவிப்பு வெளிவருவதற்கு முன்பே நான் அஜய்யின் நூலகத்திற்காக தங்கள் இருவரின் புத்தகங்களை ஆர்டர் செய்து ஜெயமோகனின் Stories of the True பெற்றிருந்தேன். சாரு நிவேதிதாவின் புத்தகங்கள் சென்ற வெள்ளிக்கிழமை (2/Sep/2022) கிடைத்தது. எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி.

எங்களது கல்லூரி விழாக்களின் போது வாய்ப்பு கிடைத்தால் தங்கள் இருவரையும் அழைக்கவேண்டும் என்பது எனது மற்றொரு ஆசை.

தங்கள் இருவருக்கும் மிக்க நன்றி மற்றும் வாழ்த்துக்கள்

இப்படிக்கு 

அன்புடன் 

சந்தானம் 

***

அன்புள்ள ஜெ

சாரு நிவேதிதாவுக்கு விஷ்ணுபுரம் விருது மகிழ்ச்சியளிக்கும் செய்தி. அதிலுள்ள மெசேஜ் என்னவென்றால் இலக்கியம் என்பது அத்தனை வேறுபாடுகளுடனும் ஒரே அமைப்பு என்பதுதான். அது ஒரு இயக்கம்.

நன்றி

ஜெகன் கிருஷ்ணா

முந்தைய கட்டுரைகைதிகள், திரைப்படமாக
அடுத்த கட்டுரைஅறம், முதல்வருக்கு…