நேருவும் பௌத்தமும்

அன்புள்ள ஜெ,

நலமா? ஆகஸ்டு மாதம் “நீலம்” பத்திரிக்கை இதழில் “நேருவும் பௌத்தமும்” என்ற என் கட்டுரை வெளியானது. தற்போது அதனை மீண்டும் பொது வாசகர்களுக்கென என் தளத்தில் வெளியிட்டிருக்கிறேன். இப்படி பொது தளத்தில் வெளியிட உங்கள் தமிழ் விக்கி தளம் ஒரு ஊக்கம். அது ஏன் அப்படி என்பது பற்றி தனியாக இன்னொரு கடிதத்தில் எழுதுகிறேன்.

நேருவுக்குப் பள்ளிக் காலமுதல் பிரதமராக இருந்த காலம் வரை புத்தரின் மீதும், பௌத்தத்தின் மீதும் அவற்றின் நீட்சியாக அசோகரின் மீதும் பெரும் ஈர்ப்பு உண்டு. தான் நிர்மானிக்க நினைத்த அறிவியல் பூர்வமான மத பூசல்களற்ற இந்தியாவுக்கு பௌத்தம் ஓர் தத்துவ அடித்தளம் என்று கருதினார் நேரு. அந்த தத்துவார்த்த அடித்தளத்தை செயல்படுத்துவதற்கு அசோகரை முன் மாதிரியாக கொண்டார். நேரு பிரதமராக இருந்த போது மிக முக்கிய பௌத்த மீட்டெடுப்புகள் நிகழ்ந்தன. அவற்றின் முக்கியத்துவத்தையும் அதில் நேருவின் பங்கையும் பேசுவதே இக்கட்டுரையின் நோக்கம்.

இக்கட்டுரை முதலில் நீலம் இதழில் வெளிவந்தது. இப்போது என் தளத்தில் சில மாற்றங்களுடன் வெளிவருகிறது.

பௌத்தத்தை நேரு எப்படி இந்தியாவின் சக தேசங்களோடு இணைக்கு மென் – வெளியுறவுக் கொள்கையாக, அப்படி ஒரு வார்த்தை மேற்கில் தோன்றும் முன்பே, கையாண்டார், பௌத்தத்தின் மீதான அவர் பற்றுதல் ஆகியவற்றை இக்கட்டுரை பேசும். நேரு என்றாலே ஏதேனும் சர்ச்சை உண்டே. நேரு ராகுல சாங்கிருத்யாயனுக்கும் அம்பேத்கருக்கும் உதவவில்லை என்ற சர்ச்சைகளுக்கும் பதில் சொல்லி இருக்கிறேன்.

நேரு இறை மறுப்பாளர், இந்திய பண்பாட்டு கொடைகளை மறுதலிப்பவர் போன்ற தவறான சித்தரிப்புகளுக்கு இக்கட்டுரை பதில் சொல்லும். நேரு பற்றி தமிழில் இம்மாதிரி கட்டுரை அரிதென்றே சொல்வேன்.

கட்டுரைக்கான சுட்டி https://contrarianworld.blogspot.com/2022/08/blog-post.html

அரவிந்தன் கண்ணையன்

***

முந்தைய கட்டுரைஒரு உலகத்தில் ஒரு வீட்டில் ஒரு மனிதன்: விஷால் ராஜா
அடுத்த கட்டுரைநீலகேசி – எத்தனை அடுக்குகள்!