விண்ணில் வாழும் தேவன்

ஆச்சரியமான ஒரு பாட்டு. பாடியவர் எங்களூர் கமுகறை புருஷோத்தமன். மலையாளப் பாடகர். தூரத்துச் சொந்தமென்றும் தெரியும். சின்னவயதில் பள்ளியை கட் அடித்து படம் பார்க்க போன என்னை உண்ணாமலைக்கடை நடுச்சாலையில் வைத்து பிரம்பால் அடித்தவர். திருவட்டாறில் ஒரு பள்ளி நிர்வாகியாக இருந்தார்.

நடிப்பவர் பிரியத்திற்குரிய நசீர் இக்கா. இசை பிரதர் லட்சுமணன். அவரும் எங்களூர்க்காரர், நெய்யாற்றின்கரை. மூலப்பாடலை எழுதியவர் திருநயினார்க்குறிச்சி மாதவன் நாயர். எங்களூரேதான். நாங்களெல்லாம் அந்தக்காலத்தில்…

இது மொழிமாற்றப்படம். 1956ல் வெளிவந்தது. மலையாள மூலம் மந்திரவாதி. இயக்குநர் கே.சுப்ரமணியம் எங்கள் குலசேகரம்காரர். திருவனந்தபுரத்தில் மெரிலாண்ட் ஸ்டுடியோ மற்றும் நீலா புரடக்‌ஷன்ஸ் நிறுவியவர். தம்பானூரில் உள்ள ஸ்ரீவிசாக்,  செண்ட்ரல் ஆகிய திரையரங்குகள் அவர் கட்டியவை.

கதை எழுதியவர் நாகவள்ளி ஆர்.எஸ் குறுப்பு. அவர் மகன் வேணு நாகவள்ளி மலையாள சினிமாவின் இருத்தலியல் சோகநாயகன் (கல்பற்றா நாராயணன் திருமணம் செய்துகொண்டபோது முதலிரவில் மனைவி சொன்னார். ‘அந்த வேணுநாகவள்ளிக்கு ஒரு வாழ்க்கை கொடுக்கவேண்டும் என ஆசைப்பட்டிருந்தேன்’)

இந்தப் படத்தில் உள்ள இன்னொரு பாட்டு இன்னும் நன்றாக இருக்கிறது

விண்ணில் வாழும் தேவனோ…நசீரிக்காவின் ரசிகனாகிய எனக்கு அது அவர்தான்

முந்தைய கட்டுரைஇசைரசனை அறிமுகம் – கடிதம்
அடுத்த கட்டுரைடம்பாச்சாரி விலாசம்