தத்துவ வகுப்புகள்…

தத்துவ வகுப்புகளை தொடங்குவது பற்றி எண்ணிக்கொண்டிருந்தேன். செப்டெம்பர் முழுக்க நான் பரபரப்பாகவே இருந்தாகவேண்டிய நிலை. இரண்டு படங்கள் வெளியாகின்றன. ஆனால் மறுசிந்தனையில் அவை வேறொரு களம், இதுவே என் களம் என்றும் தோன்றியது. ஆகவே துணிந்து நாள் முடிவுசெய்துவிட்டேன்.

நாட்கள்

செப்டெம்பர் 2,3,4  தேதிகளில் (வெள்ளி, சனி. ஞாயிறு) எங்கள் மலைத் தங்குமிடத்தில் கூடலாம்..

பொருள்

இது ஓர் அறிமுகத் தத்துவக் கல்விக்கூட்டம். தத்துவ அறிமுகம் நாடுபவர்களுக்குரியது.

இந்த அரங்கில் கல்லூரி முறையில் தத்துவப்பாடம் கற்பிக்கப்படுவதில்லை. இது உரையாடலை அடிப்படையாகக் கொண்ட பயிற்சி. தத்துவக் கல்வியின் அடிப்படைகள், தத்துவ அறிமுகம் ஆகியவையே நிகழும்.

இப்போதைக்கு இந்து தத்துவ மரபு மட்டுமே கற்பிக்கப்படும். ஆனால் மதவழிபாட்டுத் தன்மையுடன் அல்ல. மெய்யியல் நோக்கில்.

நிபந்தனைகள்

  1. மூன்று நாட்களும் கலந்துகொண்டாகவேண்டும்
  2. கூட்டுவிவாதத்திற்கான எல்லா நெறிகளும் உண்டு.
  3. இது அறிமுகம் நாடுபவர்களுக்குரிய அமர்வு. ஏற்கனவே வெவ்வேறு முறைகளில் எதையேனும் கற்று அவற்றை விவாதிக்க விரும்புபவர்கள் பங்கெடுக்கவேண்டியதில்லை.

கட்டணம்

மூன்றுநாட்களுக்கு உணவுடன் ரூ 3000 கட்டணம் ஆகும். (கட்டணம் கட்டமுடியாத நிலையிலுள்ளவர்கள் தெரிவித்தால் அதை நன்கொடை வழியாக ஈடுகட்டுவோம்)

ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். பெயர், தொலைபேசி, முன்னரே அரங்குகளில் கலந்துகொண்டதுண்டா, படிப்பு மற்றும் பணி, ஊர் ஆகிய தகவல்களுடன் எழுதவும்

ஜெயமோகன்

[email protected]

முந்தைய கட்டுரைசிறுகதைப் பயிலரங்கு, சத் தர்சன்
அடுத்த கட்டுரைவங்கப்பஞ்சம்- கடலூர் சீனு