கம்பதாசன், சிலோன் விஜயேந்திரன் -கடிதங்கள்

கம்பதாசன்

அன்புள்ள ஜெ

கம்பதாசன் பற்றிய விக்கி பதிவு அருமையானது. ஒரு கலைக்களஞ்சியத்தை இப்படி ஆர்வமூட்டும்படி படிக்கலாம் என்பதே திகைப்பூட்டுகிறது. அதிலும் அவர் வாழ்க்கை ஒரு காவியநாயகனின் வாழ்க்கை. (எத்தனை பெண்கள்) கம்பதாசன் என்ற பெயரே தகும். கம்பனைப்போலவே வாழ்ந்திருக்கிறார்.

கம்பதாசனுக்கு சென்னையின் நடனக்கலைஞர்களுடன் நெருக்கமான தொடர்பு உண்டு என்பது ஒரு அற்புதமான செய்தி. நீங்கள் சொன்னதுபோல ஒரு அருமையான நாவலுக்கான எல்லாமே உள்ளது.

செல்வக்குமார்

***

அன்புள்ள ஜெ

கம்பதாசன் பற்றிய குறிப்பில் வரும் சிலோன் விஜயேந்திரனை நான் இளம்வயதில் சினிமாக்களில் கொடூரவில்லனாக பார்த்திருக்கிறேன். அவருக்குள் இருந்த இலக்கிய அர்ப்பணிப்பும், அவருடைய பயங்கரமான மரணமும் படபடப்பை ஏற்படுத்தின.

ராஜ் அருண்

முந்தைய கட்டுரைவங்கப்பஞ்சம்- கடலூர் சீனு
அடுத்த கட்டுரைபிரேமா உஷார்!