எனக்குப் பிடித்த நடிகைகளில் ஒருவர் மாதவி. மலையாளத்தில் மிக வலுவான சில படங்களில் நடித்திருக்கிறார். அவருடைய கண்கள் அழகியவை.
ஒரு நல்ல பாட்டை படமாக்க அழகிய முகம் மட்டுமே போதும் என ஆனந்தக்குட்டன் ஒளிப்பதிவு நிரூபித்த படம் இது. நான்கு மணிநேரத்தில் ஒரே இடத்தில் எடுத்து முடித்த பாடல்காட்சி.
இசை ஜான்சன்
பாடல் பூவச்சல் காதர்
பாடகர் ஜேசுதாஸ்
படம் ஒரு குடக்கீழில்
அனுராகினி இதா என் கரளில் விரிஞ்ஞ பூக்கள்
ஒரு ராக மாலயாய் இது நின்றே ஜீவனில்
அணியூ அணியூ அபிலாஷ பூர்ணிமே
காயலின் பிரபாத கீதங்கள்
கேட்குமீ துஷார மேகங்கள்
நிறமேகும் ஒரு வேதியில்
குளிரோலும் சுப வேளையில்
பிரியதே மம மோகம் நீயறிஞ்ஞு
மைனகள் பதங்ஙள் பாடுந்நூ
கைதகள் விலாசமாடுந்நூ
கனவெல்லாம் கதிராகுவான்
எந்நுமென்றே துணையாகுவான்
வரதே அனுவாதம் நீ தரில்லே?
(தமிழ்)
காதல்கொண்டவளே இதோ
என் இதயத்தில் விரிந்த மலர்கள்
ஒரு ராக மாலையாக இதை
உன் உயிரில் அணிவாயாக
விழைவின் முழுநிலவே
ஏரியின் காலைக் கீதங்களை
கேட்கும் இந்த பனிமுகில்கள்
நிறம் பூசிய மேடையில்
குளிர் அலையும் சுபவேளையில்
பிரியமானவளே என் மோகத்தை நீ அறிந்தாய்
மைனாக்கள் கவிதைகள் பாடுகின்றன
தாழைமடல்கள் ஆனந்த நடனமிடுகின்றன
கனவுகளெல்லாம் கதிராக
என்றும் என் துணைவியாக
வரமளிப்பவளே, நீ அனுமதியளிக்க மாட்டாயா?