சிப்பியும் நீர்ப்பூச்சியும், கடிதம்

நீர்ப்பூச்சியும் சிப்பியும்

அன்புள்ள ஜெ,

சென்ற வாரம் எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களை நேரில் சந்திக்க சென்றிருந்தேன். சினிமா பற்றியும் வாசிப்பு பற்றியும் சில கேள்விகளைக் கேட்டேன். நல்ல உதாரணங்களுடன் எளிமையாக விளக்கிக் கொண்டிருந்தார். வாசிப்பைப் பற்றி அவர் பேசுகையில்அதிகமா வாசிப்பது முக்கியமல்ல.ஆழமாக வாசிப்பதே முக்கியமானது.” என்றார். அதிகமாக வாசிப்பது என்பது மேற்பரப்பில் நீந்துவது போன்றது என்றும் நாம் ஆழத்திற்குச் செல்ல வேண்டும் என்றும் சொன்னார்.

ஒரு வாரமாக அதைப்பற்றியே யோசித்துக் கொண்டிருந்தேன். இன்று உங்கள் தளத்தில்நீர்ப்பூச்சியும் சிப்பியும்என்ற தலைப்பில் வெளியான கட்டுரையை வாசித்தேன். இதுவரை என் வாசிப்பு நீர்ப்பூச்சி வாசிப்பாக மட்டுமே இருந்து இருக்கிறது என்பதைப் புரிந்து கொண்டேன்.

அதை வாசிக்க வேண்டும் இதை வாசிக்க வேண்டும் என்ற வேகம் மட்டுமே என்னிடம் இருந்துள்ளது. இனி, ஆழமாக வாசிக்க முயற்சி செய்கிறேன்.

உங்களுக்கும் எஸ்.ரா அவர்களுக்கும் என் நன்றியை தெரிவித்துக்  கொள்கிறேன்.

அன்புடன்,
நிதீஷ் கிருஷ்ணா

 *

அன்புள்ள ஜெ

நலம்தானே?

நீர்ப்பூச்சியும் சிப்பியும் ஓர் அழகான கட்டுரை. சிறிய கட்டுரை. ஆகவே நினைவில் நிற்பது. அத்துடன் அந்த படிமம் எப்போதுமே அந்தகருத்தை நினைவில் நிறுத்தி வைப்பது. இயல்பாக வரும் இந்த வகையான படிமங்கள்தான் சிந்தனைக்கு மிக அடிப்படையானவை என நான் நினைக்கிறேன். குரு நித்யாவின் சொற்கள் அல்லவா அவை?

ராஜேஷ்

முந்தைய கட்டுரைவாணிஸ்ரீயின் நிலம்
அடுத்த கட்டுரைகோவை விழா, கடிதங்கள்