சோற்றுக்கணக்கு, ஒரு கடிதம்

அன்புள்ள ஆசிரியருக்கு

சோற்றுக்கணக்கு கதை படித்தலிருந்தே பல்வேறு சந்தர்ப்பங்களில் பல்வேறு நபர்களை உணவு பரிமாறுபவர்களை சந்திக்கும் போது அதன் முக்கியத்துவத்தை நினைப்பதுண்டு.

அந்தக் கதை பற்றி உடன் பணிபுரிபவர்களுடனும் ஒரு பயிற்சி வகுப்பிலும் கூட வாசிப்பு அனுபவ உரையாடலில் பங்கு பெற முடிந்தது.போன வாரம் நாகர்கோயில் சென்றிருந்தோம்.நமது குழுமத்தில் கெத்தேல் சாஹிப் உணவகம் பற்றிய செய்திக் கட்டுரை வந்திருந்தது.உடனே திட்டமிட்டோம்.

உணவகம் சிறியது.போதும் என்கிற அளவுக்கு பரிமாறுகிறார்கள்.சுவையான உணவு.விலையும் அதிகமில்லை.சாஹிப் அவர்களின் மகன் கடையில் தான் இருந்தார்.எழுத்தாளர் ஜெயமோகன் அவர்கள் எழுதிய கதையின் உந்துதலால் வந்தோம் என்றோம்.யா அல்லா என்றபடியே இருக்கையிலிருந்து எழுந்து வந்து எங்களோடு நின்றுகொண்டு பேசத் தொடங்கினார்.தற்போது பேரப்பிள்ளைகள் நடத்துவதாக சொன்னார்.அப்பாவின் படம் சட்டமிட்டு மாட்ட இருப்பதாக சொன்னார்.சாலை பஜாரில் நின்று முழுவதும் பார்த்தேன்.கதையில் உள்ள வரிகள் நினைவில் ஓடியது.

ஒரு கதை வாசித்து விட்டு அந்த கதை எழுதிய எழுத்தாளரை சந்தித்தித்து இருக்கிறேன்.கதையில் வரும் இடங்களை தேடிப்போவது இதுதான் முதல் முறை.மிக்க மகிழ்வாக இருந்தது.உங்களுக்கு நன்றி சொல்லிக் கொள்கிறேன்.

குமார் சண்முகம்

முந்தைய கட்டுரைநாணயத்தின் மதிப்பு
அடுத்த கட்டுரைசாரு- ஒரு கட்டுரை