யானைடாக்டர் இலவச நூல்

அன்புள்ள ஜெ,

நினைக்கும் தோறும் கண்கள் பனித்த வண்ணமே இருக்கிறது. உணர்ச்சிகள் ஒருபுறம்…..இதைப் பற்றிய விழிப்புணர்வைக் கொண்டு சேர்க்க வேண்டிய கடமை இருக்கிறது. இவ்விழிப்புணர்வைக் கொண்டு சேர்ப்பதில் ஆர்வமுள்ள நண்பர்களோடு சேர்ந்து, இக்கதையைப் பதிப்பித்து சுற்றுலாவாக மாற்றப்பட்டுள்ள காடுகளுக்கு வருகிறவர்களிடம் கொண்டு சேர்க்கும் எண்ணத்தில் உங்களுக்கு இக்கடிதம் எழுதுகிறேன், உங்கள் கருத்தும், அனுமதியும் எதிர் நோக்கி ….

செய்ய நினைக்கும் ஆர்வத்தில் தோன்றிய இவ்எண்ணத்தில் நான் கவனிக்காது விட்டுவிட்ட குறைகள், தவறுகள் இருப்பின் தெரியப்படுத்துங்கள், உங்களுக்குக் கிடைக்கும் நேரம் பொறுத்து…

நன்றி,
வள்ளியப்பன்.

அன்புள்ள வள்ளியப்பன்

ஏற்கனவே யானைடாக்டர் கதையை அவர் நினைவாக நிகழ்ந்த நினைவுகூரல் விழாவில் தனி நூலாகவெளியிட்டார்கள். இலவசமாக வழங்கப்பட்டது. அதன்பின்னர் விஷ்ணுபுரம் இலக்கியவட்டம் அமைப்பு சார்பில் இலவசமாக வழங்கப்படும் சிறு நூலாக அதை அச்சிட்டிருக்கிறார்கள். அது வழங்கப்பட்டுக்கொண்டிருக்கிறது.

நீங்கள் மேலும் அச்சிட்டு வழங்க விரும்பினால் செய்யலாம். அல்லது விஷ்ணுபுரம் இலக்கிய வட்ட நண்பர்களைத் தொடர்புகொள்ளவும்

ஜெ

யானை டாக்டர் விழா புகைப்படங்கள்

 

தொடர்பு மற்றும் உதவிக்கு

 

யானைடாக்டர் சிறுகதை பிடிஎஃ வடிவில் இறக்கிக்கொள்ள

முந்தைய கட்டுரைஅசடனும் ஞானியும்- கடிதங்கள்
அடுத்த கட்டுரைபத்மநாபனின் செல்வம்- மேலும் விளக்கம்