கணிதம்

அன்புள்ள ஜெ,

இதைப் படிக்கும் பொழுது , ஒரு விதமான மலைப்பு வருகிறது ஜெ. ஏதோ எங்கோ கொண்டு செல்கிறது.தத்துவம் 2500 வருடத்திற்கு முன்பு அடைந்தவற்றைக் கணிதத்தின் மூலம்  அடைய முயற்சி “Godels theory of incompleteness ” , தஸ்தயேவ்ஸ்கி சொல்லுவதைப் போல் ” two times two is four is a real wall” . ஒரு தொகுப்பு வெப்சைட் . இதைப் படித்தால் இன்னும் கொஞ்ச நாட்களில் கணிதத்தில் பக்திக்கு ஒரு “theoram” கொடுத்துவிடுவார்கள் போல :-)
http://geb.stenius.org/

regards
madhu lachin
அன்புள்ள மது
கணிதம் எனக்குப் பெரிய பழக்கமில்லை. நான் கணிதமே படித்ததில்லை. ஆனாலும் இந்த இணையதளக் கட்டுரைகளை மோதிப்பார்த்தேன் எனக்கென்ன தோன்றுகிறதென்றால்  கணிதமும்  கவிதையும் இரு எல்லைகள்.  முழுமையான தர்க்கம் , முழுமையான அதர்க்கம். இங்கு நாம் அறிவதையெல்லாம் எப்படிக் கவிதையாக ஆக்கமுடியுமோ அப்படி அனைத்தையும் எப்படியோ கணிதமாகவும் ஆக்க முடியலாம்.
எல்லா கணிதசூத்திரங்களும் கவிதைகளே என ஒருமுறை நித்யா சொன்னார்

ஜெ

முந்தைய கட்டுரைஇலியட்டும் நாமும் 4
அடுத்த கட்டுரைஹூசெய்ன், ஒரு கடிதம்