இயற்கை உணவு, கடிதம்

வணக்கம் ஜெயமோகன் அவர்களே

நான் தங்களின் இயற்கை உணவு : என் அனுபவம்

கட்டூரையை படித்தேன், நான் கடந்த 40 வருடகாலமாக இயற்கை உணவை பயன்படுத்துகின்றேன், மேலும் யோகாவில் முனைவர் பட்டம் பெற்று முழு நேர யோக பயிற்யாளராகவும், இயற்கை உணவு ஆராய்ச்சியாளராகவும் இருக்கின்றேன்.இயற்கை உணவு மற்றும் யோகா சார்ந்து சில புத்தகங்களும் எழுதியுள்ளேன்.

அந்த கட்டுரையில் நீங்கள் குறிப்பிட்ட சிவ சைலம் இராமகிருஷ்ணன் அவர்கள் தான் என் குரு. நான் அவருடன் கிட்டத்தட்ட 6 வருடங்கள் இருந்திருக்கின்றேன்.

நீங்கள் அவரைப்பற்றியும், இயற்கை உணவு பற்றியும் மிகவும் விளக்கமாகவும், நன்றாகவும் எழுதி இருந்தீர்கள். அந்த கட்டுரையில் பொதுவாக எல்லோருக்கும் இருக்கும் மனத்தடைகளையும், சந்தேகங்களையும் விளக்கி இருந்தீர்கள்.  மிக்க நன்று.

மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.

இயற்கை உணவு சார்ந்த தங்களின் வேறு ஏதேனும் கட்டுரை இருந்தாலோ, அல்லது வேறு ஏதேனும் சுட்டிகள் இருந்தாலோ தெரியப்படுத்தவும்.

நன்றி

Regards.
Dr. Yogi krishnan.

அன்புள்ள ஜெ. மோ,   வணக்கம். இயற்கை மருத்துவம் பற்றிய தங்களது முந்தைய
பதிவில் நீங்கள் சிவசைலம் சென்று திரு. எம். ராமகிருஷ்ணன் அவர்களை
சந்தித்தது பற்றியும், அவரது  “நோயின்றி வாழ முடியாதா?” எனும் படைப்பை
மலையாளத்தில் மொழிபெயர்த்ததுப் பற்றியும் சொல்லியிருந்தீர்கள். அதற்குப்
பிறகு பலரும் அந்த நூலை படிக்க ஆவல்காட்டியிருந்தனர். ஆனால் அது தற்சமயம்
கிடைக்கப் பெறவில்லை என தெரிவித்திருந்தீர்கள்.
நான்
தூத்துக்குடி மாவட்டத்தில் குலசேகரன்பட்டினம் எனும் ஊரில் வசித்துவரும்
திரு. மு. ஆ.அப்பன் அவர்களை சந்தித்த போது மேற்கண்ட நூலை பற்றி கேட்டேன்.
அவரிடமும் அந்த நூல் இல்லை. ஆனால் அதன் ஆங்கில மொழிபெயர்ப்பை தந்து
உதவினார்.  திரு.எம். ராமகிருஷ்ணன் அவர்களின் இளைய சகோதரர் தான் திரு.
மு.ஆ.அப்பன்.

திரு.எம்.ராமகிருஷ்ணன் அவர்களின் நூலை  ஹைதராபாதிலுள்ள GOOD HEALTH
FOUNDATION சார்பில் திரு.ஜே.என். தாமோதர் என்பவர் IT IS IN YOUR HANDS
TO LIVE WITHOUT DISEASES எனும் தலைப்பில் ஆங்கிலத்தில்
மொழிபெயர்த்துள்ளார்.
இதை தாங்கள் தமிழில்
பெயர்த்து தங்களின் தளத்தில் வெளியிட்டால் அனைவரும் பெரும்பயன் பெறுவர்
என்பது எனது அவா. எனவே அதை தங்களுக்கு அனுப்ப தங்களது முகவரியை தெரிவிக்க
கோருகின்றேன். நன்றி.

முந்தைய கட்டுரைஇலியட்டும் நாமும்-1
அடுத்த கட்டுரைஇலியட்டும் நாமும் 2