அஞ்சலி-சிவத்தம்பி

ஈழ இலக்கியத்தின் முக்கியமான அறிஞர்கள் இருவர், க. கைலாசபதி  முதல்வர். இரண்டாமவர் கார்த்திகேசு சிவத்தம்பி. முதிர்ந்த வயதில் தமிழ் இலக்கிய உலகின் பிதாமகர்களில் ஒருவராகக் கணிக்கப்பட்ட கா. சிவத்தம்பி நேற்று மாலை கொழும்பில் காலமானர்.

உறுதியான மார்க்ஸியரான சிவத்தம்பி,ஈழ முற்போக்கு இலக்கியத்தின் முன்னோடி. சங்ககாலம் முதலான தமிழ் இலக்கியப் பரிணாமத்தை மார்க்ஸிய ஆய்வுக்கருவிகளின் உதவியால் சமூகவியல் நோக்கில் ஆராய்ந்த வழிகாட்டி.

அவரைப்பற்றிய விரிவான ஆராய்ச்சிக்கட்டுரை இந்தத் தளத்தில் உள்ளது

இலக்கிய முன்னோடிக்கு என் அஞ்சலி

கா.சிவத்தம்பி, தமிழ் விக்கி

கோட்பாட்டின் வலிமையும் வழிச்சுமையும்- கா சிவத்தம்பியின் இலக்கிய நோக்கு

ஜெயமோகன் பார்வையில் ஈழ இலக்கியம்:ரஸஞானி

முந்தைய கட்டுரைஅனந்தபத்மநாபனின் களஞ்சியம்
அடுத்த கட்டுரைஅனந்த பத்மனாபனின் சொத்தை என்ன செய்வது?