தமிழ் விக்கி தூரன் விருது பதிவு – வல்லினம்

தமிழ் விக்கி இணையக் கலைக்களஞ்சியம் சார்பில் வழங்கப்போகும் தூரன் விருது குறித்து அறிவிப்பு வந்தபோதுதான் மேலும் அவர் குறித்து வாசித்துத் தெரிந்துகொண்டேன். தமிழின் முதல் நவீன கலைக்களஞ்சியத்தைத் தொகுத்தவர் என மட்டுமே அதுவரை அவரை அறிந்து வைத்திருந்தேன். அந்நூல் தொகுதி எனக்களிக்கும் பிரமாண்டத்தைக்கொண்டு ஒருவர் தன் வாழ்நாளில் அதை மட்டுமே செய்ய முடியும் என நானாக முடிவெடுத்திருக்கலாம். தமிழ் விக்கி மூலமே தூரன் முன்னோடியான பாரதி ஆய்வாளர், மரபுவழிக் கவிஞர், மொழிபெயர்ப்பாளர், பதிப்பாளர், தமிழிசைப் பாடல்களின் ஆசிரியர், குழந்தைகளுக்கான பாடல்களை இயற்றியவர் என அவரது பல ஆளுமைகளை அறிந்துகொள்ள முடிந்தது.

அவர் பெயரில் வழங்கப்படும் முதல் விருது என்பது ஒரு வரலாற்று நிகழ்வு என கொஞ்சம் நுண்ணுணர்வு இருந்தாலே அறிந்துகொள்ள முடியும். இவ்விருது இன்னும் வளர்ந்து பண்பாடு, இலக்கியம் சார்ந்த களங்களில் பங்களிப்பாற்றியவர்களை கௌரவிக்கப் போவதையும் அவ்வாளுமைகளை பரந்த தளத்தில் அறிமுகப்படுத்தப்போவதையும் தமிழ் அறிவியக்கத்தில் மகத்தான செயல்பாடாகவே கொள்ளலாம்.

தூரன் ; பத்மபாரதி; சுவாமி பிரம்மானந்த சரஸ்வதி – வல்லினம்

முந்தைய கட்டுரைதமிழ் விக்கி தூரன் விருது – வலைதளம்
அடுத்த கட்டுரைசுமந்திரன் கதை