சிங்கப்பூர் கவிதைப் பட்டறை – சரவணன்

சென்ற வெள்ளிகிழமை NPS International School ல் இசை, சாம்ராஜ் வழிநடத்திய சிங்கப்பூரின் பல்வேறு பள்ளி மாணவர்கள் கலந்து கொண்ட கவிதை/கதை பட்டறை நடைபெற்றது

இது ஒரு சவாலான நிகழ்சிதான். இங்கு மாணவர்களுக்கு தமிழ் ஒரு பாடமாக இருக்கிறதே தவிர அவர்கள் சிந்தனை மொழியாக தமிழ் இருப்பதில்லை. ஆங்கிலம்தான் அவர்கள் பேச்சு மொழியாகவும், சிந்தனை மொழியாகவுமே இருக்கிறது. தமிழ் இலக்கியம் என்பது அவர்களின்ஆர்வமானஒன்றுக்குள் வருவது கடினமானது. இவர்களுக்கு தமிழ் கவிதை சார்ந்த பட்டறை /அறிமுகம் என்பது உண்மையிலேயே சவாலானது

நிகழ்ச்சியின் ஆரம்பம் குழந்தைகளுக்கான இயல்பான விளையாட்டுதனம், தமக்கு ஆர்வமற்றவற்றில் கவனமின்மை, நண்பர்களுக்குள் சீண்டி, சிரித்து பேசிக்கொண்டிருப்பது என்றே  இருந்ததுஇந்த நிகழ்வுக்கான யுக்தியை இசையும் சாம்ராஜும் முன்பே பேசி வைத்து செயல்படுத்தினார்களா அல்லது அவர்கள் இயல்பில்அதுஅப்படி வந்ததா என்று தெரியவில்லை

இசை நிகழ்வை ஆரம்பிக்கும்போதே ஜாலியாக பேசிஎளிமையாக, நட்பு பாவனையில் அந்த குழந்தைகளின் மட்டத்துக்கு இறங்கிவந்து, அவர்களது தயக்கங்களை எல்லாம் போக்கிஉள்ளுக்குள்இழுத்து வந்தான். நீங்கள் உங்கள் ஆசிரியர் சொன்னதுபோல் நோட்ஸ் கூட எடுக்க வேண்டம், சும்மா கேட்டுக்கொண்டிருங்கள், என்ன உங்களுக்குள் நுழைகிறதோ அதுவே போதும் என்றான். அவனது இரண்டாவது பெரும் அஸ்திரம்…… முகுந்த் நாகராஜன் கவிதைகள். அவ்வளவுதான், குழந்தைகள் முழுவதும் இந்த உலகத்த்க்குள் வந்துவிட்டார்கள்

அடுத்து வந்த சாம்ராஜ் ஜெயமோகனை நினைவுபடுத்தினார். ஒரு கண்டிப்பான ஆசிரியரின் குரலில் முதலிலேயே குழந்தைகளுடன் பேசி ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டார். “ நான் 3000 கிலோமீட்டர்கள் தாண்டி இங்கு வந்தது, உங்களை சந்திக்கத்தான். எனக்கு என் நேரம் முக்கியம், உங்கள் நேரமும் எனக்கு மிக முக்கியம், எனவே நான் மிக குறைந்த நேரமே எடுத்துக்கொள்ளப் போகிரேன். ஆனால் இந்த குறைந்த நேரத்தில் முழுமையாக உங்கள் கவனத்தை எனக்கு கொடுங்கள், நானும் எனது முழுமையை உங்களுக்கு கொடுக்கிறேன். சொன்னதுக்கு மேல் ஒரு நிமிடம் நான் எடுத்துக்கொள்ளமாட்டேன்”. பின் சாம்ராஜ் குழந்தைகளுக்கு கதை சொல்ல ஆரம்பித்தார். குழந்தைகள் அப்படியே கேட்டார்கள். கதைகளோடு நவீன தமிழ் இலக்கிய உலகின் அனைத்து பிதாமகர்களையும் குழந்தைகளுக்கு அறிமுகம் செய்துவைத்தார்

இந்த பதிவை எழுத தூண்டியது மேலே சொன்ன எதுவும் அல்லநிகழ்வுக்கு பின் குழந்தைகள் கேட்ட கேள்விகள்தான். அவ்வளவு கேள்விகள், அவர்கள் ஆசிரியர்களே எதிர்பாராத அளவில் கேள்விகளாக கேட்டுக்கொண்டேஇருந்தனர். கவிதைகள் சார்ந்து, கவிஞர்கள் சார்ந்து, எழுதுதல், எழுதும் மனநிலை சார்ந்து, ஏன் கவிதை எழுதவேண்டும் என்பது முதலான பல பல  வேடிக்கையான, கேலிக்குறிய,, “குழந்தைதனமானஅவ்வளவு கேள்விகள். ..

இந்த கவிதை, இலக்கியம் எல்லாம் அவர்களுக்கு மிக அந்நியமான உலகம்அந்நியமானவைகளில் இருந்து நாம் முற்றிலும் விலகிப் போவோம் அல்லது அது நம் அறியும் ஆர்வத்தை தூண்டும். இசை, சாம்ராஜ் பிரயோகித்த இந்தஇருஎல்லையுக்திகள் குழந்தைகளுக்கு அவர்களின்  அந்நியமான உலகத்தின் மீதான ஆர்வத்தை தூண்டி உள்ளுக்குள் இழுத்துக்கொண்டதை பார்க்க முடிந்ததுஇந்த வகையான  இனிமையான அறிமுகம் தமது ஆர்வங்களில் தமிழிலக்கியத்தையும் ஒன்றாக உள்னுழைத்துக்கொள்ள இக்குழந்தைகளுக்கு ஒரு காரணமாக கண்டிப்பாக இருக்கும்.

சரவணன் சிங்கப்பூர்

முந்தைய கட்டுரைமுதல் ஆறு -கடிதங்கள்
அடுத்த கட்டுரைஅபி 80, ஜி.எஸ்.எஸ்.வி.நவீன்