ஈரோடு, தமிழ் விக்கி தூரன் விருது விழா

தமிழ்க் கலைக்களஞ்சியத்தை உருவாக்கியவரும், இசைப்பாடலாசிரியருமான மறைந்த பெரியசாமி தூரன் நினைவாக விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் சார்பில் தமிழ் விக்கி பெரியசாமி தூரன் விருது ஆண்டுதோறும் வழங்கப்பட உள்ளது. இவ்விருது ரூபாய் இரண்டு லட்சமும் சிற்பமும் அடங்கியது.

இவ்வாண்டுக்கான விருது மானுடவியல் – நாட்டாரியல் ஆய்வாளரான முனைவர் திரு கரசூர் பத்மபாரதி அவர்களுக்கு வழங்கப்பட உள்ளது. இவ்விழா ஈரோடு, சென்னிமலை சாலை, கவுண்டம்பாளையத்தில் அமைந்துள்ள ராஜ் மகால் திருமண மண்டபத்தில் வரும் ஆகஸ்ட் மாதம் 14-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்கு நிகழ உள்ளது.

உரையாடல் அரங்குகள்:

13.08.2022

சிறப்பு விருந்தினராக மலேசியாவிலிருந்து சுவாமி பிரம்மானந்தா அவர்கள் வருகிறார்.  விழாவுக்கு முதல் நாள் 13 ஆகஸ்ட் 2022 சனிக்கிழமை இரவு சுவாமி பிரம்மானந்தாவுடன் உரையாடல் நிகழும். வாசகர்கள் கலந்து கொள்ளலாம்.

உரையாடலில் பங்கு கொள்ள 13 ஆம் தேதி  சனிக்கிழமை மாலை வரவிரும்பும் வாசகர்கள் [email protected] என்ற மின்னஞ்சலுக்கு கீழ்க்கண்ட தகவல்களை பகிர்ந்து பதிவு செய்து கொள்ள வேண்டுகிறோம்.

பெயர் :
ஊர்:
வயது:
தொலைபேசி எண்:

14.08.2022

14 ஆகஸ்ட் 2022, ஞாயிறு காலை 10.00 மணி முதல் அ.கா.பெருமாள், கவிஞர் மகுடீஸ்வரன், லோகமாதேவி, கரசூர் பத்மபாரதி ஆகியோருடனான வாசகர் உரையாடல் அரங்குகள் நிகழும்.

நன்றி

கரசூர் பத்மபாரதி

சுவாமி பிரம்மானந்த சரஸ்வதி

அ.கா.பெருமாள்

கு.மகுடீஸ்வரன்

லோகமாதேவி

 

முந்தைய கட்டுரைகமல் உரையாடல், இரண்டாம் பகுதி பற்றி…
அடுத்த கட்டுரைசு.வேணுகோபால், சொல்முகம் கருத்தரங்கு