ஓர் உடன்தங்கல்
இன்று காலை என்னுடன் மலையிடம் ஒன்றில் உடன்தங்குதல் பற்றி அறிவித்திருந்தேன். சற்று வேலையாக இருந்தமையால் கவனிக்கவில்லை. காலையிலேயே பத்துபேர் வருவதற்கு விரும்பி எழுதிவிட்டனர். முதலில் கோரியவர்களுக்கு வரும்படிச் சொல்லி மின்னஞ்சல் அனுப்பிவிட்டேன். இனி இடமில்லை. பத்துபேருக்குமேல் தங்கினால் அது முகாம் ஆகிவிடும். இது தனிப்பட்ட ஒரு கூடுகை மட்டுமே.
அடுத்த முறை தங்கும்போது அறிவிக்கிறேன். இதில் புதியவாசகர் போல நிபந்தனை ஏதுமில்லை. வந்தவர்கள் மீண்டும் வரலாம்.
பிகு: அமெரிக்க நண்பர்கள் சிலர் வரவிரும்புபவர்களிடம் பணமில்லை என்றால் செலவை ஏற்பதாகச் சொன்னார்கள். ஏற்கனவே ஒருவர் அவ்வாறு வருகிறார். இன்னொருவருக்கும் வாய்ப்பளிக்கலாமென நினைக்கிறேன். விரும்பும் ஒரே ஒரு இளம் நண்பர் (மாணவர் என்றால் முன்னுரிமை) விண்ணப்பிக்கலாம்.
ஜெயமோகன்