ரமேஷ், ஒரு கடிதம்

அன்புள்ள ஜெ

பாண்டிச்சேரிக்கு நீங்கள் சென்று வந்தது ஒரு சாதாரணமான குறிப்பு. ஆனால் எனக்கு உங்கள் ஒவ்வொரு சாதாரணமான நாட்குறிப்பிலும் ஓர் இடமாவது அற்புதமான ஒரு கருத்து, ஒரு செய்தி அமைவதுண்டு.  சில இடங்களில் கண்கலங்கச்செய்யும் நிகழ்வு அமையும். ஒரு அற்புதமான புனைவுபோல இருக்கும். அப்படிப்பட்ட ஒன்று நீங்கள் இந்த கட்டுரையில் ரமேஷ் பற்றி எழுதியது. கவிஞனுக்கு தேவதைகள் அருள்கின்றன என்பது ஒரு வகை ரொமாண்டிசேஷனாக இருக்கலாம். ஆனால் அது ஒரு விஷனும் கூட.

ரவி

***

அன்புள்ள ஜெ

ரமேஷை கவனித்துக் கொள்ளும் பிரேமா அவர்களுக்கு நீங்கள் மலர்ச்செண்டு வழங்கும் படத்தைப் பார்த்தேன். எவ்வளவு அர்த்தங்கள் கொண்ட செயல் அது என நினைத்துக் கொண்டேன். தமிழ்ச் சமூகமே செய்யவேண்டிய கடமை அது. வணக்கம், நன்றிகள்

செல்வி

முந்தைய கட்டுரைஆரோக்கிய நிகேதனம், கடிதம்
அடுத்த கட்டுரைவடவரையை மத்தாக்கி….கிருஷ்ணன் சங்கரன்