ஒரு சமூகம் தன் வரலாற்றை எப்படி நினைவுகூர்கிறது என்பது முக்கியமான ஆய்வுப்பொருள். அதில் தரவுகள், பார்வைக்கோணம் மட்டுமல்ல மொழிக்கும் முக்கியமான இடமுண்டு. வரலாற்றை சமூகம் ஒரு மொழிக்கட்டுமானமாக ஆக்கிக் கொள்கிறது. வரலாற்றாசிரியர்கள் வரலாற்றின் முன்வரைவை உருவாக்குகிறார்கள். வரலாற்றெழுத்தாளர்கள் அவற்றை மொழிவடிவமாக ஆக்குகிறார்கள். வரலாற்றுக்கும் சமூகத்துக்குமான பாதையில் சமூகத்திற்கு, மக்களுக்கு மிக அண்மையில் இருப்பவர்கள் வரலாற்றெழுத்தாளர்கள். மா.இராசமாணிக்கனார், அ.கி.பரந்தாமனார் போன்றவர்கள் தமிழின் முதன்மையான வரலாற்றெழுத்தாளர்கள்
மா.இராசமாணிக்கனார் தமிழக வரலாறு, சைவத்தின் வரலாறு ஆகிய இரண்டிலும் இன்று நாம் சிந்திக்கும் மொழியை உருவாக்கியவர்களில் ஒருவர்
மா.இராசமாணிக்கனார்- தமிழ் விக்கி